1. Home
  2. தமிழ்நாடு

பொதுமக்கள் மிகவும் எதிர்பார்த்த பெட்ரோல், டீசல் விலை குறைப்பு : மக்கள் ஏமாற்றம்..!

1

இந்தியாவில், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தபோது, எப்போதாவது பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டன. பெரும்பாலும் விலை அதிகரிக்கப்பட்டே வந்தது. இதையடுத்து, கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களே மாதந்தோறும் நிர்ணயிக்க அனுமதிக்கப்பட்டது. முதலில் மாதத்திற்கு இருமுறை மாற்றியமைக்கப்பட்ட விலை, 2017 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள்தோறும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருப்பதற்கு காரணம் அவைகள் மீதான மத்திய, மாநில அரசுகளின் வரிகளே. சுங்க வரி உள்பட மத்திய அரசின் வரியாக 21 சதவிகிதமும், மாநில அரசின் வாட் வரியாக 16 சதவிகிதமும் வசூலிக்கப்படுகிறது. 

இச்சூழ்நிலையில் 2022 ஆம் ஆண்டு மீண்டும் பெட்ரோல் டீசல் விலையை குறைத்தது மத்திய அரசு. பெட்ரோல் மீதான கலால் வரி 8 ரூபாயும், டீசல் மீதான கலால் வரி 6 ரூபாயும் குறைக்கப்பட்டது. மத்திய அரசை பின்பற்றி சில மாநில அரசுகளும் வாட் வரியை குறைத்ததால் மேலும் விலை குறைந்தன.

இந்த நிலையில், நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை 10 ரூபாய் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது.தற்போது கச்சாய் எண்ணெய் பீப்பாய்க்கு 80 அமெரிக்க டாலர் என்ற அளவில் இருப்பதே. மக்களவை தேர்தல் வரும் நிலையில், எண்ணெய் நிறுவனங்களின் லாபத்தை சற்றே குறைத்து, அது மக்களுக்கு சலுகையாக வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது 

இந்நிலையில் இடைக்கால பட்ஜெட் உரையில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றி எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதனால் மக்கள் சற்று  ஏமாற்றம் அடைந்துள்ளனர்  

Trending News

Latest News

You May Like