பாபா வாங்கா கணிப்பு உண்மையாகுமா? ஏலியன்கள் இவங்களுக்குதான் முதல்ல சிக்னல் கொடுப்பாங்க..!

பாபா வாங்கா 2025 ஆம் ஆண்டிற்கான பல கணிப்புகளையும் செய்தார்.
2025 ஆம் ஆண்டு ஐரோப்பிய கண்டத்தில் பெரும் கலவரம் வெடிக்கும் என்றும் இதனால் பெரும் உயிர்ச்சேதம் ஏற்படும் என்றும் கூறியிருந்தார்.
மேலும் உலக நாடுகளின் பருவம் நிலை மாற்றம் வெட்டிக்கிளி படையெடுப்பு போன்றவற்றால் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் சரியும் என்றும் உணவு பொருள் உற்பத்தி பாதிக்கப்படும் எனவும் கணிஙத்துள்ளார். பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் சரிவை சந்திக்கும் எனவும் பாபா வங்கா தெரிவித்திருந்தார்.
இந்த ஆண்டில் மருத்துவ உலகில் புதிய புரட்சி ஏற்படும் என்றும் ஆய்வு கூடங்களில் மனித உடல் உறுப்புகள் தனியாக வளர்க்கப்படும் எனவும் தெரிவித்தார். மேலும் சூரிய புயல் காரணமாக மின்சாரம் தடைபடும் எனவும் இதனால் உலகமே இருளில் மூழ்கும் ஆபத்து உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
சூரிய புயலால் இணைய சேவைகள் பாதிக்கப்படும் எனவும் பாபா வங்கா தெரிவித்திருந்தார். மேலும் இந்தாண்டில் ஏலியன்கள் எனப்படும் வேற்றுக் கிரகவாசிகள் பூமியை தொடர்பு கொள்வார்கள் எனவும் கூறியிருந்தார். இந்நிலையில் ஏலியன்கள் எந்த நாட்டை தொடர்பு கொள்வார்கள் என பாபா வங்கா கணித்துள்ளது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதன்படி ஏலியன்களின் முதல் சிக்னல் ஹங்கேரி நாட்டை தான் வந்தடையும் எனவும் ஹங்கேரி நாட்டைதான் தான் ஏலியன்கள் முதலில் தொடர்பு கொள்வார்கள் எனவும் பாபா வங்கா கணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வேற்றுக் கிரக வாசிகள் பறக்கும் தட்டுகளில் பூமியை நோட்டமிடுவதாக பல காலங்களாக தகவல்கள் பரவி வருகின்றன.
ஆனாலும் ஏலியன்கள் குறித்த தகவலை இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டில் ஏலியன்கள் பூமியை தொடர்பு கொள்வார்கள் என பாபா வங்கா கணித்திருந்த நிலையில் எந்த நாட்டை முதலில் தொடர்பு கொள்வார்கள் என்பது குறித்தும் பாபா வங்கா தெரிவித்துள்ளது ஏலியன்கள் குறித்த ஆர்வத்தை அதிகரித்துள்ளது.