1. Home
  2. தமிழ்நாடு

மக்களுக்கு அடுத்த ஷாக்..! வரும் 1ம் தேதி முதல் மீண்டும் உயரும் கார் விலைகள்..!

1

ஏப்ரல் 1ம் தேதி முதல் இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார்களின் விலையை உயர்த்தவிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது மாருதி. அதனைத் தொடர்ந்து பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மாருதியின் விலையேற்றத்தைப் பின்பற்றலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

மூலப் பொருட்கள் விலை உயர்வு மற்றும் போக்குவரத்துச் செலவு உயர்வு ஆகிய காரணங்களினால் உற்பத்தி செலவு உயர்ந்திருப்பதாகவும், அதன் காரணமாகவே தற்போது இந்த விலை உயர்வை அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருப்பதாகவும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

  • மாருதி சுஸூகி - 4%
  • டாடா மோட்டார்ஸ் - எவ்வளவு என்று குறிப்பிடவில்லை
  • கியா - 3%
  • மஹிந்திரா - 3%
  • ஹூண்டாய் - 3%
  • ரெனோ - 2%
  • ஹோண்டா - எவ்வளவு எனக் குறிப்பிடவில்லை
  • BMW - 3%
  • மினி - 3%


தற்போது வரை இந்த ஆட்டோமொபைல் நிறுவனங்கள் விலையேற்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கின்றன. ஏப்ரல் தொடங்குவதற்கு இன்னும் சில வாரங்கள் இருக்கும் நிலையில், பிற ஆட்டோமொபைல் நிறுவனங்களும் விலையேற்ற அறிவிப்பை விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோண்டா மற்றும் ரெனோ உள்ளிட்ட சில நிறுவனங்கள் ஜனவரி மாதம் காரின் விலையை உயர்த்தவில்லை. இவற்றைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களுக்குமே இது நான்கு மாதங்களில் இரண்டாவது விலை உயர்வு அறிவிப்பு தான். 

Trending News

Latest News

You May Like