குட் நியூஸ்..! பத்திரப்பதிவு கட்டணம் ஒரு சதவீதம் குறைப்பு..!

தமிழகத்தில் சொத்து பத்திரங்களை பதிவு செய்யும் போது, அதன் மதிப்பில் ஏழு சதவீதத்தை, முத்திரை தீர்வையாகவும், 2 சதவீதத்தை பதிவு கட்டணமாகவும், செலுத்த வேண்டும்.
'மகளிர் பெயரில் பதிவாகும் பத்திரங்களுக்கு, பதிவு கட்டணத்தில் ஒரு சதவீதம் குறைக்கப்படும்' என, தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.
அதை செயல்படுத்தும் வகையில், 10 லட்சம் ரூபாய் வரையிலான வீடு, மனை, விவசாய நிலங்களை, மகளிர் பெயரில் வாங்குவோருக்கு, ஒரு சதவீதம் பதிவு கட்டணம் குறைப்பு சலுகை, நாளை முதல் அமலுக்கு வருகிறது. இதற்கான அரசாணையை பதிவுத்துறை செயலர் குமார்ஜெயந்த் வெளியிட்டுள்ளார்.