1. Home
  2. தமிழ்நாடு

வெளுத்து வாங்கும் வெயில்..! இதெல்லாம் குடிப்பதை தவிருங்க மக்களே..!

1

தற்போது கோடை காலம் என்பதால் வெயில் நேரத்தில் இறுக்கமான ஆடைகளை அணிவதை தவிர்க்கவும்.தேநீர், காபி, மது மற்றும் கார்பன் ஏற்றப்பட்ட (Carbonated) குளிர்பானங்கள் போன்றவற்றை அருந்துவதை தவிர்க்க வேண்டும். இவை உடலில் நீரிழப்பை ஏற்படுத்தும்.


கோடை காலம் முடியும் வரை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை வெயிலில் அவசிய பணிகள் தவிர பிற காரியமாக செல்வதை தவிர்க்க வேண்டும். தவிர்க்க முடியாத பயணத்தின்போது குடிநீர் பாட்டிலை எடுத்துச் செல்ல வேண்டும்.

மிருதுவான, தளர்ந்த, காற்றோட்டமுள்ள பருத்தி ஆடைகளை அணியவேண்டும்.திறந்த வெளியில் வேலை செய்யும் போது தலையில் பருத்தி துணி அல்லது துண்டு அணிந்து கொள்ள வேண்டும். சூரிய வெப்பம் அதிகமாக உள்ள திறந்தவெளியில் வேலை செய்யும்போது களைப்பு, தலைவலி, தலைசுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக வெப்பம் குறைவாக உள்ள குளிர்ந்த இடத்துக்குச் செல்லலாம்.


அதிகளவிலான நீர் பருக வேண்டும். மோர், இளநீர், உப்பு மற்றும் மோர் கலந்த அரிசிக் கஞ்சி, உப்பு கலந்த எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றைப் பருகலாம். கோடையில் குளிர்ந்த நீரால் குளிப்பது நன்மை அளிக்கும். சூரிய ஒளி நேரடியாக படும் ஜன்னல் மற்றும் கதவுகளை திரைச் சீலைகளால் மூட வேண்டும். வாகனங்களுக்குள் குழந்தைகளை விட்டுச் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

மது, வாயு நிரப்பப்பட்ட குளிர்பானம், அளவுக்கு அதிகமாக தேநீர் மற்றும் காபி, அதிகளவில் இனிப்பு சேர்க்கப்பட்ட பானங்கள் ஆகியவற்றை அருந்துவதைத் தவிர்க்க வேண்டும், என்று தெரிவித்துள்ளார். 


வெயில் நேரங்களில் சிறுவர்கள் திறந்தவெளியில் விளையாடுவதை தவிர்க்க வேண்டும். 
வெயிலில் குழந்தைகளை கார் போன்ற வாகனங்களில் தனியாக விட்டுச் செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் கதவு அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பநிலை அபாயகரமான நிலையில் உயரக்கூடும். 


 

Trending News

Latest News

You May Like