கலைஞர் கனவு இல்லம் திட்டம் : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? தேவையான ஆவணங்கள் என்னென்ன..?

குடிசை வீடுகள் இல்லா மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் தமிழ்நாடு அரசு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, புது வீடு கட்ட நினைப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி வந்திருக்கிறது.
அதாவது, புதிதாக சுமார் 1 லட்சம் வீடுகளை இந்த திட்டத்தின் கீழ் கட்ட தமிழ்நாடு அரசு திட்டமிட்டு அதற்காக 3500 கோடி ரூபாய் நிதியையும் பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளது.
Also Read - VR மாலில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க தடை!
அதனால், இப்போது யாரெல்லாம் இந்த திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டலாம், எப்படி கட்ட வேண்டும், அதற்கான தகுதிகள் என்ன என்பதை இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகள் 360 சதுர அடி என்ற பரப்பளவில் கட்ட வேண்டும். அதில் முக்கியமாக 300 சதுர அடி ஆர் சி சி கூடையுடன் காங்கிரட் ஆகவும் மீதம் இருக்கும் 60 சதுரஅடி தீ பற்றாத பொருட்களின் மூலம் கூறையாக ஒவ்வொரு பயனாளிகளும் விருப்பத்திற்கு ஏற்ப அமைத்துக் கொள்ளலாம்.
இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்படும் ஒவ்வொரு வீட்டிற்க்கான தொகை அனைத்தும் சேர்த்து ரூபாய் 3.50 லட்சம் ஆக இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டப்படும் வீட்டின் சுவர்கள் அனைத்தும் செங்கல், ஏசிசி பிளாக், மற்றும் இன்டர் லாக் சிஸ்டம் கொண்ட பொருட்களால் மட்டுமே கட்டாயம் கட்டியிருக்க வேண்டும்.
முக்கியமாக கட்டப்படும் வீட்டின் சுவர்கள் மண்ணால் கட்டப்பட்டு இருக்க கூடாது. வீடு கட்டுவதற்கான செலவினை குறைக்க பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் கட்டுமானங்களை விரைவாக கட்டி முடிக்க பயன்படுத்தும் தொழில்நுட்ப உபகரணங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் அதற்கான அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது
மேலும் பயனாளிகளை தேர்வு செய்பவர்கள் யார் யார் என்றால் அதாவது இந்த திட்டத்தில் தகுதியான பயனாளிகள் மட்டுமே இணைக்க வேண்டும் என்று அரசின் முக்கிய நோக்கம். அதாவது ஏழ்மை குடும்பத்தை சார்ந்தவர்கள், வீடு இல்லாதவர்கள், குடிசை வீட்டில் இருப்பவர்கள், ஓட்டு வீட்டில் இருப்பவர்கள் மட்டுமே முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னவென்றால், Land Document xerox ( பத்திரம் நகல் ), Ration Card ( ரேஷன் அட்டை ), Patta &Chitta Copy ( பட்டா & சிட்டா ), Aadhaar Card ( ஆதார் அட்டை ), Phone or Mobile number) தொலைபேசி நம்பர், Passport Size ( அளவு புகைப்படம் ), Bank Passbook ( வங்கி கணக்கு விவரம் ), Income certificate ( வருமானச் சான்றிதழ் ), Address details ( முழு முகவரி )
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் என்னவென்றால், Land Document xerox ( பத்திரம் நகல் ), Ration Card ( ரேஷன் அட்டை ), Patta &Chitta Copy ( பட்டா & சிட்டா ), Aadhaar Card ( ஆதார் அட்டை ), Phone or Mobile number) தொலைபேசி நம்பர், Passport Size ( அளவு புகைப்படம் ), Bank Passbook ( வங்கி கணக்கு விவரம் ), Income certificate ( வருமானச் சான்றிதழ் ), Address details ( முழு முகவரி )