அருமையான திட்டம்! மாதந்தோறும் ரூ. 2,800 முதலீடு செய்தால் போதும்..

சேமிப்பு திட்டங்களில் பிக்சட் டெபாசிட் பிரபலமானது. ஒரே நேரத்தில் அனைவராலும் முதலீடு செய்ய முடியாது. அப்படி உள்ளவர்கள் போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் RD திட்டங்களில் டெபாசிட் செய்யலாம். மொத்தமாக முதலீடு செய்ய முடியாதவர்கள், இந்த திட்டத்தில் இணையலாம்.
தற்போது தபால் அலுவலக திட்டத்திற்கு 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்டு வருகிறது. எனவே மாதந்தோறும் சிறு தொகையை RD திட்டத்தில் முதலீடு செய்து நல்ல லாபத்தை பெறலாம். இந்த திட்டத்திற்கு ஐந்து ஆண்டுகள் முதிர்வு காலம். குறைந்தபட்சமாக ரூ. 100 முதலீடு செய்து இந்த திட்டத்தின் கிழ் கணக்கு துவங்க முடியும். அதிகபட்ச வரம்பு என்பது கிடையாது.
போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டங்களில் மாதந்தோறும் சிறு தொகையை ஐந்து ஆண்டுகள் டெபாசிட் செய்ய வேண்டும். இதற்கு வட்டி வருமானமாக கிடைக்கும். உதாரணமாக ஒருவர் RD திட்டத்தில் மாதந்தோறும் 2,800 ரூபாய் டெபாசிட் செய்து நல்ல லாபத்தை பெறலாம். ஐந்து ஆண்டுகளுக்கு இந்த தொகையை முதலீடு செய்யும் போது, மொத்தமாக ரூ. 1,68,000 டெபாசிட் செய்யப்பட்டு இருக்கும்.
இதற்கு வழங்கப்படும் 6.7 வட்டி விகிதத்தின் படி ஐந்து ஆண்டுகளில் ரூ. 31,824 வட்டியாக கிடைக்கும். இதன் மூலமாக முதலீட்டு தொகை மற்றும் வட்டி இரண்டையும் சேர்த்து ரூ. 1,99,824 முதிர்வுத்தொகையாக பெறலாம். இந்த திட்டத்தில் முதலீட்டாளர்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும். அத்துடன் டெபாசிட் செய்யப்பட்ட தொகையும் பாதுகாப்பானதாக இருக்கும்.