1. Home
  2. தமிழ்நாடு

இன்று சண்டே..! இன்றைய சமையலை சூப்பரானதாக மாற்றும் கறிவேப்பிலை சிக்கன்!

1

ஒவ்வொரு நாளும் சிக்கனை சுவையாகச் சமைப்பதற்கு புதுப்புது வழிகள் கண்டுபிடிக்கப்பட்டு கொண்டே இருக்கிறது.

சிக்கனை குழம்பு, வறுவல், சுக்கா மற்றும் கபாப் எனப் பல வழிகளில் சமைக்கலாம். அப்படி பிரியாணி மற்றும் பிற சாப்பாடு வகைகளுக்குச் சைடிஷாக வைத்துச் சாப்பிடக்கூடிய ஒரு உலர்ந்த சிக்கன் வறுவல்தான் கறிவேப்பிலை சிக்கன்.

கறிவேப்பிலையின் நன்மைகள் என்னென்ன என்பதை நாம் நன்கு அறிவோம். இதைச் சிக்கனுடன் அதிகளவில் சேர்த்து சமைத்து சாப்பிடும்போது அதன் நன்மைகளும், சுவையும் பலமடங்கு அதிகரிக்கும்.

இந்தப் பதிவில் சண்டே செய்வதற்கு ஏற்றச் சூப்பரான கறிவேப்பிலை சிக்கனை எப்படி செய்யலாம் என்று தெரிந்து கொள்ளலாம்.

தேவையானப் பொருட்கள்:

  • சிக்கன் – அரை கிலோ
  • நறுக்கிய வெங்காயம் – 1
  • இஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன்
  •  பச்சை மிளகாய் – 3
  • மல்லித்தூள் – 1 ஸ்பூன்
  • மஞ்சள்தூள் – 1 ஸ்பூன்
  • எண்ணெய் – 2 ஸ்பூன்
  • உப்பு – தேவைக்கு ஏற்ப
  • கொத்தமல்லி இலை – சிறிதளவு

கறிவேப்பிலை மசாலா செய்ய:

  • கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி
  • இலவங்கப்பட்டை – 1
  • அன்னாசி பூ – 1
  • ஏலக்காய் – 1
  • சோம்பு – 1 ஸ்பூன்
  • வரமிளகாய் – 2
  • மிளகுத்தூள் – 1 ஸ்பூன்

செய்முறை:

  • சிக்கனை நன்றாகக் கழுவி ஓரமாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
  • கருவேப்பிலை மசாலா செய்ய, ஒரு கடாயை குறைந்த தீயில் சூடாக்கி, கறிவேப்பிலை, இலவங்கப்பட்டை, அன்னாசி பூ, ஏலக்காய், சோம்பு, வர மிளகாய், கருப்பு மிளகு ஆகியவற்றைச் சேர்த்து, அனைத்தையும் வறுத்து, மசாலா வாசனை வரும் வரை வறுக்கவும். வறுத்தவுடன் ஆற விடவும்.
  • வறுத்த மசாலா நன்கு ஆறியதும் அதை மிக்ஸி ஜாரில் போட்டு மென்மையான பொடியாக அரைக்கவும். இதை ஓரமாக வைத்துக் கொள்ளவும்.
  • பின்னர் ஒரு பாத்திரத்தை மிதமான தீயில் வைத்து, சிறிது எண்ணெய் சேர்க்கவும்.
  • எண்ணெய் சூடானதும், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பச்சை வாசனை போனதும் வெங்காயத்தைச் சேர்த்து அது பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  • வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும், அதில் பச்சை மிளகாய் மற்றும் சிக்கனுடன் மஞ்சள் தூளை சேர்த்து வதக்கவும்.
  • சிக்கன் பாதி வேகும் வரை பொருட்களை ஒன்றாகக் கிளறவும்.
  • சிக்கன் பாதி வெந்ததும் அதில் அரைத்து வைத்த கறிவேப்பிலை மசாலா மற்றும் கொத்தமல்லி தூள் சேர்த்து, உப்பு தூவி, சிக்கன் நன்றாக வேகும் வரை வதக்கவும்.
  • சிக்கன் அடிபிடிக்காமல் அடிக்கடி கிளறி விடவும். சிக்கன் முழுமையாக வெந்ததும் இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளைப் போட்டு அடுப்பை அணைக்கவும்.

சண்டே சைடிஷாக சாப்பிடுவதற்கு சூப்பரான கறிவேப்பிலை சிக்கன் ரெடி!

Trending News

Latest News

You May Like