இது தான் உலகின் மிக விலையுயர்ந்த வாட்ச்..! விலையை கேட்டா ஆடிப்போயிடுவீங்க..!

இந்த வாட்ச்-இன் விலையை கேட்டாலே, பெரும் பணக்காரர்கள் கூட இதை வாங்கும் முன் 10 முறை யோசிப்பார்கள் என்றே சொல்லலாம்.
வியக்க வைக்கும் $55 மில்லியன் (சுமார் ரூ. 465 கோடி) விலையுடைய இந்த ஹாலுசினேஷன் வாட்ச் ஆனது, இதுவரை தயாரிக்கப்பட்ட வாட்ச்களில் மிகவும் விலை உயர்ந்த வாட்ச் ஆகும். இந்த வாட்சை கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனர் மற்றும் தலைவரான லாரன்ஸ் கிராஃப் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது.
கிராஃப் ஹாலுசினேஷன் வாட்ச் ஆனது வெவ்வேறு வண்ணங்கள் 110 காரட் வைரங்களைக் கொண்டுள்ளது. இவை பிளாட்டினம் வளையலில் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இது லண்டனை தளமாகக் கொண்ட கிராஃப் டயமண்ட்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது.
வடிவமைப்பாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் கைவினைஞர்கள் உட்பட 30 வல்லுநர்கள் கொண்ட குழு, சுமார் நான்கரை ஆண்டுகள் கடினமாக உழைத்து, இந்த அற்புதமான வாட்சை உருவாக்கியது.
வாட்சின் மையத்தில் உள்ள வைரங்களுக்கு நடுவே சிறிய இளஞ்சிவப்பு வைரங்களால் வடிவமைக்கப்பட்ட குவார்ட்ஸ் டயல் உள்ளது. இந்த ஹாலுசினேஷன் வாட்ச் ஆனது பிங்க், ப்ளூ, க்ரீன், ஆரஞ்சு மற்றும் மஞ்சள் வண்ணங்களுடன் ஜொலிக்கிறது. இந்த ஆடம்பரமான வண்ண வைரங்கள், அவற்றின் அரிதான தன்மை மற்றும் மதிப்புக்காக பெரும் பணக்காரர்களால் பெரிதும் விரும்பப்படுகின்றன.
மேலும் இது ஆடம்பரம் மற்றும் வடிவமைப்பு ஆகிய இரண்டிலும் ஒரு தலைசிறந்த படைப்பாக அமைந்துள்ளது. இந்த ஆடம்பர கடிகாரங்கள் அணிபவர்களுக்கு சிறந்த அனுபவத்தை அளிக்கும் வகையில் கவனமாக துல்லியமாக தயாரிக்கப்படுகின்றன. கிராஃப் தனது கைக்கடிகாரங்களுக்காக சிறந்தவற்றை மட்டுமே தேர்ந்தெடுத்து வடிவமைத்துள்ளதால், இது இந்த வாட்ச்- இன் மதிப்பு மேலும் உயர்ந்துள்ளது.