பிரதமரும், நிதியமைச்சரும் பொருளாதாரம் படிக்காதவர்களாக இருக்கும்போது - சுப்பிரமணியன் சுவாமி விமர்சனம்..!

2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால நிதி அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்...
இந்நிலையில் பட்ஜெட் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளவது, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் குறித்து எனது பதிலைக் கேட்பதற்காக நிதியமைச்சக ஊழியர் என்னை தொடர்பு கொண்டார்.
'பிரதமரும், நிதியமைச்சரும் பொருளாதாரம் படிக்காதவர்களாக இருக்கும்போது, நீங்கள் வேறென்ன எதிர்பார்க்க முடியும் ?' என்றேன்...ஒன்றிய பட்ஜெட்டின் குறிக்கோள்கள், முக்கிய அம்சங்கள், பொருளாதார உத்திகள், வளங்களை திரட்டும் திட்டங்கள் ஆகியவற்றை பட்டியலிடுமாறு நான் அவரிடம் கூறினேன். அவரும் என்னை பாராட்டும் விதமாக சிரித்தார்.
An employee in Finance Ministry called me to ask my reaction to the Budget placed in Lok Sabha. I said to him “when the PM and FM are illiterates in economics, what do you expect?”. I asked him then to write down the objectives, priorities, economic strategy, resource…
— Subramanian Swamy (@Swamy39) February 2, 2024