இது தெரியுமா? உங்களிடம் இருக்கும் ஜிபே மூலம் ஈஸியா கடன் பெறலாம்..!

அவசரக்கால தேவைகளுக்குக் கூகுள் பே செயலி மூலம் எளிதாகக் கடன் பெற விண்ணப்பிக்கலாம். அதுவும் ரூ. 12 லட்சம் வரை இதில் கடன் வாங்கலாம். குறிப்பாக வாடிக்கையாளர்களுக்குக் கடன்களை வழங்கப் பல கடன் வழங்கும் நிறுவனங்களுடன் இணைந்துள்ளது கூகுள் பே. இதன் மூலமாகக் கடன் பெறலாம்.சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் கூகுள் பே நேரடியாகக் கடன்களை வழங்காது. எனவே இதனால் வாடிக்கையாளர்கள் கடன் பெறும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
அதாவது கடன்பெற விருப்பம் உள்ள பயனர்கள் தங்களது மொபைல் போனில் கூகுள் பே செயலியை ஓபன் செய்ய வேண்டும். அதில் கடன் (Personal loan) என்ற விருப்பம் இருக்கும். அதைத் தேர்வு செய்ய வேண்டும். அதன்பின்பு விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, வருமானம் போன்ற அனைத்து தகவல்களையும் பூர்த்தி செய்ய வேண்டும்.
அதன்பின்னர் கடன் விண்ணப்பத்தில் அடையாளச் சான்று, வருமானச் சான்று, வங்கி கணக்கு உள்ளிட்டவை கேட்கப்படும். இதன் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும். அடுத்து அதில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்பு கடன் ஒப்புதல் மற்றும் கடன் தொகையின் ரசீது பற்றிய விவரம் கிடைக்கும்.கடன் பெறும் தொகையைப் பொறுத்து தவணை மாறுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.மாதாந்திர தவணை ரூ.1000 முதல் துவங்குகிறது.