மக்களே உஷார்..! கிஷன் நியூ யோஜனா பெயரில் போலி ஆப்..! ‘இன்ஸ்டால்’ செய்தால் அவ்வளவு தான்...

வாட்ஸ் அப் குழுக்களில் தற்பொழுது பிரதான் மந்திரி கிஷன் நியூ யோஜனா போன்ற பெயர்களில் லோன் தருவதாக கூறி குறுஞ்செய்தி மற்றும் அதனுடன் ஆப் லிங்க் ஒன்று வருகிறது.
இது, இணைய வழி குற்றவாளிகள் உங்களிடம் பணத்தை பறிப்பதற்காக உருவாக்கிய போலியான ஆப் லிங் (App-link) ஆகும். இதை யாரும் நம்ப வேண்டாம். மேலும் இந்த ஆப்-ஐ ‘இன்ஸ்டால்’ செய்ய வேண்டாம். அப்படி நீங்கள் ‘இன்ஸ்டால்’ செய்தால் உங்களுடைய மொபைல் போனை தங்களுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு சென்று (Mobile Phone Hack ) உங்களின் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தைத் திருடி விடுவார்கள்.
மேலும் உங்களின் வாட்ஸ்-அப்பையும் அவர்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு செல்வார்கள். சமூக வலைதளங்களில் வரும் எந்த ஒரு செய்தியை யும் உறுதிப்படுத்தாமல் நம்ப வேண்டாம். பண பரிவர்த்தனை, வங்கிக் கணக்கு போன்றவற்றில் சந்தேகம் இருந்தால் சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு சென்று சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வேண்டும்
இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் எழுந்தால், 1930 / 0413 - 2276144 / 94892 05246 எண்கள் மூலம் புதுச்சேரி இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு சந்தேகங்களை தீர்த்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.