மக்கள் ஷாக்..! ஒரு கிராம் ரூ.9 ஆயிரத்தை தாண்டியது!
இன்று (ஏப்ரல் 21) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.72,120க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,015க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கம் விலை ரூ.9 ஆயிரத்தை தாண்டி நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தங்கம் விலை வரலாறு காணாத வகையில், ஒரு சவரன் ரூ.72 ஆயிரத்தை தாண்டி உள்ளது.
ஆறாவது நாளாக மாற்றமின்றி விற்பனையான வெள்ளி விலை இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு ஒரு ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 111 ரூபாய்க்கும் கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் உயர்ந்து பார் வெள்ளி 1 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
20-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
19-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
18-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,560
17-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.71,360
16-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.70,520