1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : நடிகர் கலைப்புலி சேகரன் காலமானார்..!

Q

தயாரிப்பாளர், நடிகர், இயக்குனர், தொழிற்சங்கவாதி என பன்முக திறமை கொண்டவர் ஜி.சேகரன். கலைப்புலி சேகரன் என அழைக்கப்படும் இவர், சினிமா விநியோகஸ்தராக தனது திரையுலக வாழ்க்கை துவங்கினார். பின்னர் தயாரிப்பாளர் எஸ். தாணு உடன் இணைந்து கலைப்புலி பிலிம்சின் பங்குதாரராகவும் ஆனார். 1985ல் வெளியான 'யார்' படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.
1988ல் 'ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன்' எனும் படத்தை இயக்கினார். அடுத்ததாக 'காவல் பூனைகள், உளவாளி' என அடுத்தடுத்து இயக்கத்தில் கவனம் செலுத்தினார். 1995ல் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, நடித்து வெளியான ‛ஜமீன் கோட்டை' படம் ஹிட்டானது. விநியோகஸ்தர்கள் சங்க தலைவராகவும் இருந்தார். இப்படி பன்முக திறமை கொண்ட இவர் இன்று (ஏப்.,13) உடல்நிலை பாதிப்பால் காலமானார். அவருக்கு வயது 73. இவரது உடல், சென்னை ராயபுரத்தில் உள்ள வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. சேகரனின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்

Trending News

Latest News

You May Like