நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது கூழாங்கல் படம்..!!

கூழாங்கல் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ரவுடி பிக்சர்ஸ்க்காக வாங்கி வெளியிடுகிறார். இந்த படம் முதலில் சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியாகிக் கொண்டு இருந்தது. ரோட்டர்டாம் விழாவில் புலி விருதுக்கான போட்டி பட்டியலில் கலந்து கொண்டு விருது பெற்றது. இந்நிலையில் இந்தியாவின் சார்பில் ஆஸ்கருக்கு செல்லும் படமாக கூழாங்கல் தேர்வானது.