1. Home
  2. தமிழ்நாடு

மாணவர்களே..!! கட் ஆப் மதிப்பெண் என்றால் என்ன? எவ்வாறு கணக்கீடு செய்யப்படுகிறது தெரியுமா?

1

பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் தங்களுக்கு பிடித்த மற்றும் பிரபலமாக இருக்கும் கல்லூரிகளில் சேர விரும்புகின்றனர். ஆனால், பொறியியல் கலந்தாய்வில் கட்- ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் தான் தரவரிசை வெளியிடப்படும். 

அதை தொடர்ந்து, கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு விருப்பமான இடங்கள் தேர்வு செய்ய அனுமதிக்கப்படுவார்கள். கட்-ஆப் மதிப்பெண்களின் அடிப்படையில் மாணவர்கள் விரும்பும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும்.   

பொறியியல் படிப்பிற்கு 12ம் வகுப்பு தேர்வின் மாணவர்கள் இயற்பியல், கணிதம், வேதியியல் மதிப்பெண்கள் அடிப்படை யில் கட்-ஆப் கணக்கிடப்படும். கணிதத்தில் 100க்கு எடுத்த மதிப்பெண்கள் அப்படியே எடுத்துகொள்ளப்படும்.   இயற்பியல் மற்றும் வேதியியல் பாடங்களில் பெற்ற மதிப்பெண்கள் 100க்கு கொண்டுவரப்படும். தொடர்ந்து, கணிதம், மற்றும் இரண்டு பாடங்கள் 100க்கு பெற்ற மதிப்பெண்கள் சேர்ந்தால் வருவதே கட்-ஆப் மதிப்பெண்கள்.   

உதாரணத்திற்கு, கணிதம் - 98, இயற்பியல் 89, வேதியியல் 68 என்றால், இயற்பியல் + வேதியியல் மதிப்பெண் கன் சேர்ந்து 100க்கு எடுத்துகொண்டால் 88.5 ஆகும். இதனுடன் கணித மதிப்பெண்கள் சேர்ந்தால் மொத்தம் 185.5 ஆகும். இதுவே கட்-ஆப் மதிப்பெண்கள். இந்த முறைகளின்படியே கட்-ஆப் தேர்வு செய்யப்படுகிறது. கோர் படிப்பு னை தவிர்த்து இதர படிப்புகளுக்கு குறைவான கட்-ஆப் போதுமானதாக கருதப்படுகிறது. 

இந்த முறைகளின்படியே கட்-ஆப் தேர்வு செய்யப்படுகிறது. கோர் படிப்பு னை தவிர்த்து இதர படிப்புகளுக்கு குறைவான கட்-ஆப் போதுமானதாக கருதப்படுகிறது. 

Trending News

Latest News

You May Like