1. Home
  2. தமிழ்நாடு

காங்கிரஸ் ட்விட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவு..!! கே.ஜி.எப் 2 படத்தால் வந்த சோதனை... !!

காங்கிரஸ் ட்விட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவு..!! கே.ஜி.எப் 2 படத்தால் வந்த சோதனை... !!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலை முன்னிட்டு, அக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி, பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமைப் பயணத்தை மேற்கொண்டு உள்ளார்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த மாதம் தொடங்கிய இந்திய ஒற்றுமைப் பயணம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரா ஆகிய மாநிலங்களைக் கடந்து, தற்போது, மகாராஷ்டிர மாநிலத்திற்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில், இந்த யாத்திரையின் போது, கேஜிஎஃப் - 2 படத்தின் பாடலை அனுமதி இன்றி பயன்படுத்தி வீடியோவாக தயாரித்து காங்கிரஸ் கட்சி மற்றும் பாரத் ஜோடோ யாத்திரை ஆகியவற்றின் ட்விட்டர் கணக்குகளில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

இதை அடுத்து, தங்கள் அனுமதி இன்றி கேஜிஎஃப் - 2 படத்தின் பாடலை பயன்படுத்தியதாக, எம்ஆர்டி நிறுவனம் சார்பில் எம்.நவீன் குமார் என்பவர் புகார் அளித்தார்.


காங்கிரஸ் ட்விட்டர் கணக்கை முடக்க நீதிமன்றம் உத்தரவு..!! கே.ஜி.எப் 2 படத்தால் வந்த சோதனை... !!

அந்த புகாரில், எம்ஆர்டி இசைநிறுனத்தை நிர்வகித்து வரும் எம் நவீன்குமார் என்பவர் கடந்த மாதத்தில் காங்கிரஸ் கட்சி நடத்தும் இந்திய ஒற்றுமை யாத்திரை கர்நாடகாவில் நடைபெற்ற போது, அதில் அனுமதி இல்லாமல் மாபெரும் கன்னட வெற்றிப்படமான 'கேஜிஎஃப்-2' படத்தின் இசை பயன்படுத்தப்பட்டது என்றும், இது காப்புரிமை சட்டத்திற்கு எதிரானது என்றும் கூறி, காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல் காந்தி, செய்தித்தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ், சுப்ரியா ஆகிய மூன்று பேர் மீது புகார் அளித்திருந்து வழக்கு தொடுத்திருந்தார்.

மேலும் தனது புகாரில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்த இந்திய ஒற்றுமை யாத்திரை தொடர்பான இரண்டு வீடியோக்களில் 'கேஜிஎஃப்-2' படத்தின் இசை முன்அனுமதி இல்லாமல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று நவீன்குமார் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்த வழக்கினை விசாரித்த பெங்களூரு நீதிமன்றம், தற்காலிகமாக இந்திய ஒற்றுமை யாத்திரை குறித்து பதிவுகளை கையாளும் காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்கை முடக்க உத்தரவிட்டது. தனது உத்தரவில் இசைநிறுவனம், காப்புரிமை பெற்ற உண்மையான இசையும், அதன் பதிப்புரிமை மீறப்பட்ட காப்பி அடங்கிய குறுந்தகட்டை சமர்ப்பித்திருந்தது. இசை நிறுவனம் சமர்ப்பித்துள்ள ஆவணம் ஆழமான காயத்தை ஏற்படுத்த உள்ளதையும், பைரசியை ஊக்குவிப்பதாகவும் உள்ளது என்று தெரிவித்துள்ளது.

Trending News

Latest News

You May Like