1. Home
  2. தமிழ்நாடு

கதற விடும் கோடை வெயில்... கரண்ட் பில் குறைக்க என்ன செய்யலாம்?

Q

பருவநிலை மாறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளில் வரலாறு காணாத வெப்பத்தை பார்க்க முடிகிறது.

வெயிலில் இருந்து சமாளிக்க மக்கள் மின் விசிறிகள், ஏசி, கூலர் உள்ளிட்டவற்றை அதிக நேரம் பயன்படுத்த வேண்டியுள்ளது. இது மின் கட்டணத்தை உயர்த்தி மாத பட்ஜெட்டில் துண்டு விழச் செய்து விடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் கோடை காலத்தை ஒட்டி பல்வேறு அறிவுரைகளும், வழிகாட்டுதலும் வழங்கப்படும். அந்த வகையில் நடப்பாண்டும் Tangedco எனப்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் சில அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

வீட்டில் பயன்படுத்தும் ஏசியை 24 டிகிரி செல்சியஸ் அல்லது அதற்கு மேல் வெப்பநிலையை வைத்து கொள்ளலாம்.

பயன்படுத்தாத மின் உபகரணங்களை ஸ்விட்ச் ஆப் செய்ய வேண்டும். உதாரணமாக டிவி, வாஷிங் மெஷின், மிக்ஸி, ஏசி உள்ளிட்டவற்றை சொல்லலாம்.

பகல் நேரங்களில் மின் விளக்குகள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். கதவு, ஜன்னல்களை திறந்து வைத்து சூரிய வெளிச்சத்தை பயன்படுத்தி கொள்வது மிகவும் சிறப்பானது.

இவ்வாறு மூன்று விதமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுதவிர பொதுவான வழிகாட்டுதல்களும் வல்லுநர்களால் அளிக்கப்பட்டு வருகின்றன.

ஏசியில் உள்ள ஃபேன்களை அவ்வப்போது பயன்படுத்தலாம். எப்போதும் குளிரூட்ட மட்டுமே ஏசிகளை பயன்படுத்தக் கூடாது. மேலும் எனர்ஜி சேவிங் மோடில் வைத்து மின்சாரத்தை சேமிக்கலாம்.

மின்சாரத்தை சேமிக்கும் விளக்குகளை வாங்கி பயன்படுத்துவது அவசியம். எல்.இ.டி விளக்குகள் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

மிகவும் பழைய மின் உபகரணங்களை பயன்படுத்துவதை தவிர்க்கலாம்.

ரிமோட் கண்ட்ரோல் உடனான ஸ்மார்ட் உபகரணங்களை பயன்படுத்தலாம். இதன்மூலம் குறிப்பிட்ட நேரம் மட்டும் இயங்கும் வகையில் செட் செய்துவிடலாம். இதனால் தேவைப்படாத நேரங்களில் தாமாகவே நின்றுவிடும்.

சோலார் தகடுகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் உபகரணங்களை பொருத்தி கொள்வது மிகவும் சிறந்தது. இது எல்லா காலங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.

Trending News

Latest News

You May Like