1. Home
  2. தமிழ்நாடு

சூப்பர் ஆபர்..! இந்த போனை அதிரடியாக ரூ.9,000 டிஸ்கவுண்டில் வாங்கலாம்..!

1

பிக்சல் 9 ஸ்மார்ட்போன் தற்போது 12 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடல் ரூ.74,999க்கு பட்டியலிடப்பட்டுள்ளது, இது அசல் விலையிலிருந்து ரூ.5,000 விலை குறைப்பு. வாடிக்கையாளர் கூடுதலாக ரூ.4,000 வங்கி தள்ளுபடியைப் பெறலாம், இதன் மூலம் விலை ரூ.71,000க்குக் கீழே குறைகிறது.

நீங்கள் பழைய போனை வைத்திருந்தால் Pixel 9 போனை இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், அதாவது நீங்கள் இந்த போனை எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் ரூ,61,200 யில் வாங்கலாம், இதனுடன் கூடுதலாக 1,000 எக்ஸ்சேஞ் போனஸ் நன்மையும் கிடைக்கும்.

உங்கள் சாதனத்தை EMI முறையில் வாங்க நினைத்தாள் , கஸ்டமர்கள் ரூ.3,125 முதல் தொடங்கும் கட்டணமில்லா EMI திட்டங்களைத் தேர்வுசெய்யலாம் (வங்கியைப் பொறுத்து). இல்லையென்றால், வாங்குபவர்கள் நிலையான EMI திட்டங்களையும் தேர்வு செய்யலாம்.

கூடுதல் அம்சங்களின் ஒரு பகுதியாக, வாங்குபவர்கள் ரூ.1,199க்கு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும், ரூ.1,250க்கு முழுமையான மொபைல் பாதுகாப்பு தொகுப்பையும் தேர்வு செய்யலாம். கஸ்டமர்கள் அப்சிடியன், பியோனி, பீங்கான் மற்றும் வின்டர்கிரீன் உள்ளிட்ட நான்கு வெவ்வேறு வண்ணங்களில் இருந்து தேர்வு செய்யலாம்

Trending News

Latest News

You May Like