உங்களுக்கு 15 நாள் தான் டைம்...! பள்ளி மாணவி பாலியல் வழக்கில் அதிரடி காட்டிய முதல்வர் ஸ்டாலின்..!
இந்த நிலையில், என்சிசி முகாமிற்குச் சென்ற 12 வயதுடைய 8-ம் வகுப்பு மாணவி ஒருவர், கடந்த 8-ம் தேதி அதிகாலை பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவியருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணி அளவில், என்சிசி பயிற்சியாளரான காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்த சிவராமன் (30) என்பவர், மாணவியை தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மாணவி தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பள்ளியின் முதல்வர் சதீஷ்குமாரிடம் தெரிவித்துள்ளார். அவர் இந்த விஷயத்தை பெரிதுபடுத்த வேண்டாம் எனக் கூறியதாகத் தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 16-ம் தேதி இரவு மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் தனது தாயாரிடம் நடந்த சம்பவம் குறித்து கூறியுள்ளார். உடனே அவரது பெற்றோர் அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்தச் சம்பவத்தில் என்.சி.சி பயிற்சியாளர் சிவராமன், தாளாளர், முதல்வர் உள்பட 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். என்சிசி பயிற்சியாளர் சிவராமன் நாம் தமிழர் கட்சி முன்னாள் இளைஞர் பாசறையின் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்தவர். இந்த என்சிசி முகாமில் 13 சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை 15 நாளில் விசாரித்து முடிக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், வழக்குகளின் விசாரணையை விரைந்து முடித்து 60 நாட்களுக்குள் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி கடும் தண்டனையை பெற்றுத்தர வேண்டும் என்றும் ஆணையிட்டுள்ளார்.