இது தெரியுமா ? PhonePe மூலம் இலவசமாக சிலிண்டரைப் பெற முடியுமாம்..!

PhonePe மூலம் இலவசமாக சிலிண்டரைப் பெற முடியுமா? என்று நீங்கள் யோசிக்கிறீர்களா. ஆம், இந்த வசதி PhonePeல் கிடைக்கிறது. எனவே, இந்த இலவச சிலிண்டர் சலுகை தொடர்பான விரிவான தகவலை இங்கே பார்க்கலாம்.
ஒவ்வொரு வீட்டிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது. சிலிண்டர் தீர்ந்துவிட்டால், அதை மீண்டும் முன்பதிவு செய்ய வேண்டும். எனவே, உங்கள் வீட்டில் ஒரு காலி சிலிண்டர் இருந்தால், அதை PhonePe மூலம் முன்பதிவு செய்ய வேண்டும். இப்படி முன்பதிவு செய்பவர்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால், சிலிண்டர் இலவசமாகக் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரையிலான நேரத்தில் முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த சலுகை கிடைக்கும். ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு இலவச சிலிண்டர் கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக PhonePe கூறுகிறது. ஒவ்வொரு நாளும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு வெற்றியாளருக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
PhonePe வழங்கும் இந்த சலுகை டிசம்பர் 31 2025 வரை நீடிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து யுபிஐ, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, வாலட் என எந்த முறையைப் பயன்படுத்தியும் PhonePe மூலம் சிலிண்டரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.