வாட்ஸ்ஆப் செயலியில் வந்தாச்சு 2 புதிய அப்டேட் ..!

மக்கள் அதிகம் பயன்படுத்தும் செயலிகளில் ஒன்றாக வாட்ஸ்ஆப் இருக்கிறது. இந்நிலையில் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் நோக்கில் புது புது அப்டேட் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது அருமையான இரண்டு அப்டேட் வந்துள்ளது. அதாவது இன்ஸ்ட்டா செயலியை போலவே வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்கான ‘லைக் பட்டன்’ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதே போல வாட்ஸ்ஆப்பில் பிரைவசி நோக்கத்தை மேம்படுத்தும் அப்டேட் ஒன்று வந்துள்ளது. அதாவது கடவுக்குறியீடு மூலம் அரட்டைகளைப் பூட்டும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கடவுக்குறி மூலம் அரட்டையை பூட்டும் வசதி முதன்மை ஸ்மார்ட்போனில் மட்டுமே இருந்தது. வாட்ஸ்அப்பின் சமீபத்திய பீட்டா பதிப்பில் உள்ள ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் இப்போது இந்த வசதியை பயன்படுத்தலாம்.