1. Home
  2. தமிழ்நாடு

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு : வினாத்தாள் எப்படி இருந்தது?

1

குரூப்-4 தேர்வுக்கான அடிப்படை கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு (SSLC) தேர்ச்சி என்றபோதிலும், பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள் முனைவர் பட்டம் பெற்றவர்கள் என சுமார் 20 லட்சம் பேர் இந்த தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர்.

தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மையங்களில் குரூப்-4 எழுத்து தேர்வு இன்று (ஜூன் 9) ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரம் நடைபெற்றது. இத்தேர்வில், பொதுத் தமிழ் பகுதியில் இருந்து 100 கேள்விகள், பொது அறிவு மற்றும் நுண்ணறிவு திறன் ஆகிய பகுதிகளில் இருந்து 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற்றிருந்தன.

டிஎன்பிஎஸ்சி தேர்வில் இதுவரை இல்லாத வகையில் இத்தேர்வில் புதிதாக ஏற்றத்தக்கத்து அல்ல(Invalid) முறையானது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது ஒரு கேள்விக்கு ஏதேனும் ஒரு பதிலை வட்டமிட்டுவிட்டு அதனை அடித்துவிட்டு வேறு வட்டமிட்டால் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

வினாத்தாள் எப்படி இருந்தது?: குரூப்-4 வினாத்தாள் தொடர்பாக தேர்வு எழுதியவர்களிடம் கேட்டபோது, பொதுத் தமிழ் பகுதி சற்று கடினமாக இருந்ததாகவும், கணிதம் இந்த முறை 27 கேள்விகள் கேட்டிருந்ததோடு எளிமையாக இருந்ததாகவும், பொது அறிவு பிரிவு எளிமையாக இருந்ததாகவும் பரவலாக பதில் அளித்துள்ளனர்.

இதனிடையே, நாமக்கல் மாவட்டத்தில் பிரபல போட்டித் தேர்வு பயிற்சி நிறுவனமான ராஜாஜி நிறுவனத்தில் இருந்து குரூப்-4 தேர்வு விடைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதனை வைத்து பார்க்கும் போது சராசரியாக அனைத்து சமூகத்தில் இருந்தும் 170 கேள்விகளுக்கு பதில் அளித்தவர்களுக்கு வேலை கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த குரூப்-4 தேர்வு முடிவுகள் வரும் ஜனவரி மாதம் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஒருங்கிணைந்த குரூப்-2 மற்றும் குரூப்-2ஏ தேர்வுக்கான அறிவிப்பு வரும் 28-ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like