1. Home
  2. தமிழ்நாடு

தூத்துக்குடி இல்லை திருநெல்வேலி : வேட்பாளரை உடனடியாக மாற்றிய பாஜக..!

1

நாடாளுமன்ற தேர்தலில் தி.முக., அ.தி.மு.க., சார்பில் கோவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதன்படி தி.மு.க., சார்பில் கொவையில் கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார்.அ.தி.மு.க., சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டிடுகிறார். இதனிடையே கோவை தொகுதியில் அண்ணாமலை போட்டியிட உள்ளதாக பா.ஜ.க அறிவித்துள்ளது.மூன்று கட்சிகளும் நேருக்கு நேர் களம் காண்பதால் கோவை நட்சத்திர தொகுதியாக உருவெடுத்துள்ளது. 

தமிழிசை சவுந்தரராஜன் தென் சென்னை தொகுதியில் போட்டியிடுகிறார். நீலகிரி (தனி) தொகுதியில் திமுக வேட்பாளர் ஆ ராசாவை எதிர்த்து எல்.முருகன் களம் காண்கிறார். மத்திய சென்னையில் வினோஜ் பி செல்வம், வேலூரில் ஏசி சண்முகம் போட்டியிடுகின்றனர்.கிருஷ்ணகிரி தொகுதியில் நரசிம்மன் களம் காண்கிறார். பெரம்பலூர் தொகுதியில் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். தூத்துக்குடி தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழியை எதிர்த்து நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். கன்னியாகுமரி தொகுதியில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் களம் காண்கிறார்.

தூத்துக்குடி தொகுதியில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.தூத்துக்குடி தொகுதி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதிக்கு நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டது பாஜகவினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியது.

ஆனால், சிறிது நேரத்தில் பாஜக வேட்பாளர் பட்டியல் மாற்றப்பட்டு புதிய பட்டியல் வெளியானது. இதில், நயினார் நாகேந்திரன் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டது. திமுக கூட்டணியில் நெல்லை தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like