மதிப்பெண் குறைந்ததால் மாணவி தூக்கிட்டு தற்கொலை..!
புதுச்சேரி சேர்ந்த ஜெயபால் - பச்சையம்மாள் தம்பதியினரின் மகள் மேனகா(17). இவர் மரப்பாலம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வந்துள்ளார். இந்நிலையில் பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவி மேனகா குறைந்த மதிப்பெண்(334) எடுத்து உள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை கொண்டுள்ளார்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வில்லியனூர் காவல்நிலைய சப் இன்ஸ்பெக்டர் சரண்யா, தற்கொலை செய்துக்கொண்ட மாணவியின் உடலை கைப்பற்றிய உடற்கூறு ஆய்விற்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியின் மரணம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். புதுச்சேரியில் பனிரெண்டாம் வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் மனமுடைந்து மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.