நடிகர் ரஜினி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து - நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான்
ஆங்கில புத்தாண்டு பிறந்ததை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். தமிழகத்தில் சென்னை மெரினா கடற்கரை, பெசன்ட் நகர் எலியர்ட்ஸ் கடற்கரைகளில் இளைஞர்கள், இளைஞிகள், சிறியவர்கள், பெரியவர்கள் என கேக் வெட்டியும், டான்ஸ் ஆடியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் தேவாலயங்களிலும், கோவிலிலும் வழிபட்டனர். இந்நிலையில், நடிகர் ரஜினி 2025 ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான். கை விட மாட்டான். கெட்டவங்களுக்கு ஆண்டவன் நிறைய கொடுப்பான். ஆனா கை விட்டுடுவான். புத்தாண்டு நல்வாழ்த்துகள். #Welcome2025. இவ்வாறு ரஜினி கூறியுள்ளார்.
#Thalaivar Dharisanam Thank you Thalaivaaaaaaa ❤️❤️❤️❤️#Rajinikanth | #ChikituVibe | #Superstar @rajinikanth | #Jailer | #Coolie | #Jailer2 | #SuperstarRajinikanth | #HappyNewYear | #HappyNewYear2025 pic.twitter.com/gqWeTfqx0c
— Suresh balaji (@surbalutwt) January 1, 2025