1. Home
  2. தமிழ்நாடு

மதுரையில் இன்று 144 தடை உத்தரவு அமல்..!

1

திருப்பரங்குன்றம் மலை மீது காசி விஸ்வநாதர் கோவில் மற்றும் தர்கா அமைந்துள்ளது. இதனால், அங்கு இந்த இரண்டு மதத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் நாள்தோறும் வந்து வழிபட்டு வருகின்றனர். இருப்பினும், ‘கடந்த சில நாட்களாக மலைமீதுள்ள தர்காவில் கோழி மற்றும் ஆடுகளை உயிர் பலி கொடுக்க கூடாது’ என இந்து அமைப்பினர் தொடர்ந்து கூறி வருகின்றனர். மேலும், இந்த இரண்டு அமைப்பினர் மீதும் தற்போது 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு மதுரை நீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளது. எனவே, இவர்கள் விண்ணப்பித்திருந்த போராட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்து அமைப்பினர் அரசின் உத்தரவையும் மீறி போராட்டங்கள் நடத்த நடவடிக்கைகள் எடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ‘மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா இரண்டு நாட்களுக்கு (பிப்ரவரி 3,4) மதுரையில் 144 தடை உத்தரவை’ பிறப்பித்துள்ளார். மேலும், அசம்பாவிதங்கள் மற்றும் மத ரீதியான மோதல்கள் ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த 144 தடை உத்தரவு பிறப்பித்ததாக சங்கீதா தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like