1. Home
  2. தமிழ்நாடு

சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு : குற்றவாளிக்கு முதல் முறையாக ஜாமீன்..!

1

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்தவர் ஜெயராஜ். இவர் மகன் பென்னிக்ஸ். இருவரும் சாத்தான்குளத்தில் செல்போன் கடை வைத்திருந்தனர். கடந்த 19.6.2020-ல் கரோனா காலத்தில் ஊரடங்கு நிபந்தனையை மீறி கடையை திறந்து வைத்ததாக கூறி விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.போலீஸார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, சம்பந்தப்பட்ட போலீஸார் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இருப்பதாக கூறி சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், தலைமை காவலர் முருகன், முதல்நிலை காவர் முத்துராஜா ஆகியோரை முதலில் கைது செய்தனர்.பின்னர் சிறப்பு சார்பு ஆய்வாளர் பால்துரை, தலைமை காவலர் சாமிதுரை, முதல்நிலை காவலர்கள் வெயில்முத்து, செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் சுமார் 3 ஆண்டுகளாக சிறையில் உள்ள காவலர் வெயில் முத்துவுக்கு 3 நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. சிபிஐ விசாரித்து வரும் இவ்வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர், எஸ்.ஐ.க்கள், காவலர்கள் என 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், சுமார் 3 ஆண்டுகளாக உச்ச நீதிமன்றம் வரை சென்றும் யாருக்கும் ஜாமின் கிடைக்காத நிலையில் தற்போது வெயில் முத்துவுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

கயத்தாறு பகுதியைச் சேர்ந்த காவலர் வெயில் முத்து, தனது மகளுக்கு 7ம் தேதி பூப்புனித நீராட்டு விழா இருப்பதால் இடைக்கால ஜாமின் கோரி மனுத் தாக்கல் செய்த நிலையில், இன்று மாலை 6 மணி முதல் வரும் 9ம் தேதி மாலை 6 மணி வரை இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதி தண்டபாணி உத்தரவிட்டார்.

Trending News

Latest News

You May Like