ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ரத்து : சசிகலா!

ஜெயலலிதாவின் ஏழாம் ஆண்டு நினைவாக அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நாளை(05.12.23) அவருடைய நினைவிடத்தில் நடத்த சசிகலாவால் திட்டமிடப்பட்டது. ஆனால் தொடர் கன மழை காரணமாக இந்த அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக சசிகலா தன்னுடைய எக்ஸ் தளத்தில் அறிவித்துள்ளார். அவர் அப்பதிவில் கூறியிருப்பதாவது “வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜம் புயல் காரணமாக சென்னை ,காஞ்சிபுரம், திருவள்ளூர் ,செங்கல்பட்டு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. அதி தீவிர புயலாக மாறியுள்ள மிக்ஜம் புயலானது நாளை முற்பகல் கரையை கடக்க உள்ளது. சென்னையில் வெள்ளத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கிப் போய்விட்டது.
ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த ஜெயலலிதாவின் நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி குறிப்பிட்ட நாளில் நடத்த முடியாமல் ரத்து செய்யப்படுகிறது. தொண்டர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் கட்சித் தொண்டர்கள் அவரவர் இருக்கும் இடங்களிலேயே புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து தங்களது அஞ்சலியையும் மரியாதையையும் செலுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்றும் அறிவித்துள்ளார்.