1. Home
  2. தமிழ்நாடு

கோவையில் "ரன் ஃபார் டிரக் ஃபிரி" மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது

1

கோவையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் ரன் ஃபார் டிரக் ஃபிரி மாரத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.

கோவை மாநகரைப் பொருத்தவரை புகையிலை ஒழிப்பு குறித்து பல்வேறு நடவடிக்கைகளை போலீசார் எடுத்து வருகின்றனர் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் அவர்களின் அறிவுரைகளின் படி புகையிலை மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டை குறைக்கும் நோக்கில் விழிப்புணர்வு மாரத்தான் RUN FOR DRUG FREE COIMBATORE துவக்க விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் மற்றும் மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.இந்த மாரத்தான் பெண்களுக்கு மூன்று கிலோமீட்டர் தூரமும் ஆண்களுக்கு 5 மற்றும் 7 கிலோமீட்டர் தூரமும் நடைபெற்றது.


 

Trending News

Latest News

You May Like