1. Home
  2. தமிழ்நாடு

மக்களே உஷார்..! கொரோனாவை விட 100 மடங்கு கொடிய நாேய்..! அறிகுறிகள் இது தான்..!

1

மீண்டும் ஒரு கொடிய நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது என மருத்துவ அறிஞர்கள் பெரிய குண்டை தூக்கி பாேட்டுள்ளனர். H5N1 என்ற புதிய பறவைக்காய்ச்சல், சர்வதேச நோய் பரவலாக மாறலாம் என மருத்துவ அறிஞர்கள் பகீர் கிளப்பியுள்ளனர். இந்த நோய் கொரோனா நோய் பரவலை விட 100 மடங்கு கொடியதாக இருக்கும் எனவும், இறப்பு விகிதமும் கொரோனாவை விட அதிகமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. இதற்கான அறிகுறிகள் காய்ச்சல், இருமல், தொண்டை வலி, குளிர் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவையாகும்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் தான் முதன்முதலாக இந்தியாவில் ஏவியன் பறவைக்காய்ச்சல் தொற்று உருவாகியிருப்பது கண்டறியப்பட்டது.
குறிப்பாக கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் தான் இந்த பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

ஏவியன் பறவைக் காய்ச்சல் என்பது பறவைகளிடம் இருந்து மனிதர்களைப் பாதிக்கும் ஒருவகை இன்ஃப்ளூயன்ஸா தொற்றாகும். இந்த வகை வைரஸால் கிட்டதட்ட 12 வகையான பறவைக் காய்ச்சல் உருவாகியிருப்பது அடையாளம் காணப்பட்டு இருக்கிறது.

இத்தகைய பறவைக் காய்ச்சலும் H5N1 மற்றும் H7N9 ஆகிய இரண்டு வைரஸ் திரிபுகளும் காரணமாக இருக்கின்றன. இந்த பறவைக் காய்ச்சல் மனிதர்களைப் பாதித்து தீவிரமாகும்போது மரணத்தை ஏற்படுத்தும் மோசமான ஒரு இன்ஃப்ளூயன்ஸா ஃப்ளூ காய்ச்சலாகும்.

இதன் பொதுவான அறிகுறிகளாக,

 
  • தொண்டை வலி.
  • இருமல்,
  • தலைவலி,
  • தசை வலி மற்றும் வீக்கம்,
  • கடுமையான காய்ச்சல்,

ஆகியவை ஏற்படும். இந்த தொற்று அடுத்தடுத்த நாட்களில் தீவிரமடைந்து வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று வலி, கடும் சுவாசக் கோளாறுகள், நிமோனியா, மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய அறிகுறிகள் உண்டாகும்.

Trending News

Latest News

You May Like