1. Home
  2. தமிழ்நாடு

மேலும் ஒரு வாரம் ஜாமினை நீட்டிக்க வேண்டும்: சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு..!

1

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமின் மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்றது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபாங்கர் தத்தா அமர்வு இந்த மனுவை விசாரித்தது. தேர்தலை முன்னிட்டு அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.

அதன்பின்னர் முதல்வர் கெஜ்ரிவால் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். கடந்த 25-ம் தேதி டெல்லியில் ஒரே கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. மொத்தம் உள்ள 7 தொகுதிகளில் இன்டியா கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி 4 மற்றும் காங்கிரஸ் கட்சி 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. தேர்தலில் கெஜ்ரிவால் தனது மனைவி, மகன், மகள் மற்றும் தந்தையுடன் வந்து வாக்களித்தார். இந்நிலையில் மருத்துவக் காரணங்களுக்காக மேலும் 7 நாட்களுக்கு ஜாமினை நீட்டிக்கும்படி கெஜ்ரிவால் சுப்ரீம் கோர்ட்டில் மனத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் சுப்ரீம் கோர்ட் கோடைவிடுமுறை கால சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Trending News

Latest News

You May Like