1. Home
  2. தமிழ்நாடு

இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கிடைத்துள்ளது... அதுவே தமிழ்நாட்டுக்கு...? அண்ணாமலை கேள்வி..!

1

முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களைத் துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

துதொடர்பாகச் சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவின் உண்மைத்தன்மை குறித்தும், இளம்பெண்களைக் காரில் துரத்தியது யார்? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

ஈ.சி.ஆர் பகுதியில் நடந்த சம்பவம் நெஞ்சை பதறவைக்கிறது. தி.மு.கக்கட்சி கொடி கட்டிய காரில் சென்று பெண்ணிடம் மோசமாக நடந்துள்ளனர்.

தி.மு.க. கொடி கட்டிய காரில் வந்து செய்த செயலைப் பார்க்கும்போது தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பு என்பது கேள்விக் குறியாகவே உள்ளது என்பதற்கு இந்தச் சம்பவமும் ஓர் உதாரணம்.

இந்தியாவுக்கு முழு சுதந்திரம் கிடைத்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டுக்கு முழு சுதந்திரம் இன்னும் கிடைக்கவில்லை.

இரவு, பகல் என எந்த நேரத்திலும் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை.

எனவே மாநில அரசு காவல் துறைக்குப் பேட்ரோல் வாகனங்களை வாங்கிக் கொடுத்து ரோந்து போகச் சொல்ல வேண்டும்.

கையாலாகாத தி.மு.க. அரசுப் பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கு ஒரு துரும்பைக் கூடக் கிள்ளிப் போடவில்லையெனத் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like

News Hub