பிரபல ஹாலிவுட் நடிகர் டொனால்ட் சதர்லேண்ட் காலமானார்..!

புகழ்பெற்ற நடிகர் டொனால்ட் சதர்லேண்ட் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
எத்தகைய கதாபாத்திரத்திலும் மிகவும் நேர்த்தியாக நடிப்பதில் டொனால்ட் வல்லவர். இவர் நடிப்பில் வெளியான மாஷ, க்லூட், ஆர்டினரி பீப்பில் மற்றும் ஹங்கர் கேம்ஸ் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை.
1960-களில் துவங்கி 2020 வரையிலும் கலைத் துறையில் மிகவும் அர்ப்பணிப்புடன் பங்காற்றியுள்ளார். ஹாலிவுட்டில் 1970-க்களில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் டொனால்ட்.
திரைப்படங்கள் மட்டுமின்றி 80-களில் வெளியான தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலும் இவர் சிறப்பான பங்காற்றினார். இவர் நடித்த பல்வேறு கதாபாத்திரங்கள் இன்றும் மக்கள் மனங்களில் வாழும்.
டொனால்ட் சதர்லேண்ட் மறைவு குறித்து அவரது மகன் கைபெர் சதர்லேண்ட் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,
கனத்த இதயத்துடன், எனது தந்தை, டொனால்ட் சதர்லேண்ட் உயிரிழந்து விட்டார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். தனிப்பட்ட முறையில் திரைப்பட வரலாற்றில் மிக முக்கிய நடிகர்களில் ஒருவராக அவரை நினைக்கிறேன்.
எத்தகைய கதாபாத்திரத்திலும் நடிக்க தயங்காதவர். அவர் செய்ததை எப்போதும் விரும்பி செய்பவர். ஒருவிஷயத்தை தனக்கு பிடித்தால் மட்டுமே செய்பவர். ஒருவர் தன் வாழ்வில் இதை விட வேறு எதையும் கேட்டு விட முடியாது. ஒரு வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்துள்ளார். இவ்வாறு அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
With a heavy heart, I tell you that my father, Donald Sutherland, has passed away. I personally think one of the most important actors in the history of film. Never daunted by a role, good, bad or ugly. He loved what he did and did what he loved, and one can never ask for more… pic.twitter.com/3EdJB03KKT
— Kiefer Sutherland (@RealKiefer) June 20, 2024