உடனே போங்க..! ஒரே நாளில் மளமளவென குறைந்த தங்கம் விலை..!

இந்தியாவில் தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறைந்தாலும் அதிகளவில் வித்தியாசமில்லாமல் 10 ரூபாய்க்குள் குறைவதும் பின் மீண்டும் தடாலடியாக உயர்வதுமாக சவரன் ரூ.56,000யைக் கடந்து ரூ.60,000 நெருங்கி வருகிறது.
விரைவில் தங்கம் விலை நிச்சயம் ஒரு சவரன் ரூ.1லட்சத்தை நெருங்கி விடும் என்று பயமுறுத்துகிறார்கள் பொருளாதார நிபுணர்கள். இதனிடையே, இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை எட்டியது.
இஸ்ரேல் லெபனான் மீதான தாக்குதலால் வளைகுடா நாடுகளில் நிலவி வரும் பதற்றம் காரணமாக சர்வதேச பங்குச் சந்தைகளிலும் பதற்றமும், சரிவுமாக தொடர்கிறது. இதனால் முதலீட்டாளர்களின் பார்வை தங்கத்தின் மீது குவிந்துள்ளதாலும் தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் நீடித்து வருகிறது.
இந்நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 560 குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 70 குறைந்து, ஒரு கிராம் 7,030 ரூபாய்க்கும், ஒரு சவரன் 56,240 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலையும் கிராமுக்கு 2 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில் சில்லறை விற்பனையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.100க்கு விற்கப்படுகிறது.