பிரதமர் மோடியிடம் போய் கேட்டுப் பாருங்கள்... நான் யாருன்னு சொல்லுவார் - அண்ணாமலைக்கு எஸ்.வி.சேகர் பதில்..!

இந்நிலையில் தற்போது மீண்டும் தமிழக பாஜக மீதான தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருக்கிறார் எஸ்வி சேகர்.. இதுகுறித்து அவர் கூறும்போது, “தமிழக பாஜக தோல்விக்கு அண்ணாமலை தான் காரணம் என்பது 100 சதவீதம் உண்மையான விஷயம். அதில் மாற்றுக் கருத்தே இல்லை. அவர் கட்சியையே போலீஸ் ஸ்டேஷன்போல நடத்துகிறார். பாஜகவில் இணைந்ததும் என்னிடம் வந்து ஆசீர்வாதம் வாங்கினார். இன்று என்னையே தெரியவில்லை என்கிறார். சிலருக்கு சில நேரம் அதிர்ச்சியில் அம்னீஷியா வந்துவிடும். கொஞ்சம் தெளிய விட வேண்டும்.. அதனால், அண்ணாமலையை ஊடகங்கள் தொந்தரவு செய்ய வேண்டாம். சிலருக்கு மைக்கை கண்டால் உளறல் ஆரம்பித்து விடும். அந்த மாதிரி தம்பி அண்ணாமலை கொஞ்சம் உடல் நலத்தைப் பார்ப்பது நல்லது.
என்னை தெரியாது என்று பாஜக தலைவர் அண்ணாமலை சொல்கிறார்.. ஆனால், பிரதமர் நரேந்திர மோடியிடம் போய் கேட்டுப் பாருங்கள். எஸ்.வி.சேகர் யாருன்னு சொல்லுவார். இன்னும் சில நாட்கள் போனால், நரேந்திர மோடிக்கு அண்ணாமலை யாரென்று தெரியாமல் போய் விடும். தமிழ்நாட்டில் பாஜக தோற்றாலும் வாக்கு வங்கி சதவீதம் உயர்ந்ததாக சொல்கிறார்கள். இது முட்டாள் தனமானது. ஒரு ஓட்டில் தோற்றாலும் தோற்றது தான். பாஜக தமிழ்நாட்டில் வாஷ் அவுட் ஆகி விட்டது என்பதே உண்மை. பாஜக பெற்ற ஓட்டுகள் கூட்டணியில் இருந்த தமாகா, புதிய நீதிக்கட்சி, அமமுக, பாமக ஆகிய கட்சிகளின் வாக்குகளையும் சேர்த்து தான் சொல்லப்படுகிறது. அதனால், வெட்கமே இல்லாமல் பொய் சொல்ல வேண்டும் என்றால் அது அண்ணாமலையால் மட்டும் தான் முடியும்” என்று சீறியிருக்கிறார் எஸ்வி சேகர்.