1. Home
  2. தமிழ்நாடு

65 வருஷங்களாக குளிக்காத மனிதர்!! இதெல்லாம் ஒரு காரணமா?!

65 வருஷங்களாக குளிக்காத மனிதர்!! இதெல்லாம் ஒரு காரணமா?!


ஈரான் நாட்டில் ஒரு மனிதர் தண்ணீரைக் கண்டால் பயம் என கூறி, சுமார் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லை என்ற தகவல் மனித குலத்தையே பெரும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

மனிதன் குளிப்பது அழுக்குகளை போக்குவதற்கு அல்ல. மாறாக மனித உடலை குளிர்விப்பதற்காக என்கிறது இயற்கை ஆய்வு முடிவுகள். மனிதர்களுக்கு 75 சதவீதம் நோய்களுக்கு மூல காரணம் அதிகப்படியான உடல் வெப்பமே. இரவு தூங்கி எழும்போது நமது உடலில் வெப்பக் கழிவுகள் நேங்கியிருக்கும். காலை எழுந்ததும் இந்த வெப்பகழிவை உடலில் இருந்து நீக்க வேண்டும். அதற்காகவே, குளிந்தநீரில் குளிக்க வேண்டும். வெந்நீரில் குளிக்க கூடாது என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். இதனால் தான் என்னவோ, நமது நாட்டில் குட்டி பையன்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் குளியல் போடுவதில் கூட ஆனந்த குளியல் என பெயர் வைத்துள்ளனர்.

ஆனால், ஈரான் நாட்டில் உள்ள 65 வயது மனிதர் கடந்த சுமார் 65 ஆண்டுகளாக குளிக்கவில்லை என்ற தகவல் பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அந்த மனிதருக்கு தண்ணீரைக்கண்டால் பயம் வருகிறதாம். இதனால், அவர் தண்ணீர் பக்கம் செல்வதில்லையாம். இதனால், அவர் கடந்த 65 வருடங்களாக குளிக்கவே இல்லை. இந்த சாதனையால், அவருக்கு அசுத்தமனிதர் என்ற வேதனையான பட்டம் கிடைத்துள்ளது. மேலும், குளித்தால் தனக்கு நோய் வரும் என அவர் அச்சம் கொண்டுள்ளதாலும், குளிப்பதை தவிர்த்து வருகிறாராம். அவரது இந்த முடிவால் அவருக்கும் மட்டுமல்லாது ஈரான் நாட்டிற்கும் இழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like

News Hub