1. Home
  2. தமிழ்நாடு

பகீர் கிளப்பும் நாடி ஜோதிடர்..! அதிபருக்கு ஆபத்து.. பயங்கர நிலநடுக்கம்..!

1

சமீபத்தில் பேட்டி அளித்த நாடி ஜோதிடர் பாபு, ஐரோப்பிய நாடுகளில் பெரிய காட்டு தீ ஏற்படும் என கூறினார். அதேபோல் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. போர் நிறுத்த ஒப்பந்தங்கள் படிப்படியாக தொடங்கும் என்று தெரிவித்தார். அதன்படியே இஸ்ரேல் - ஹமாஸ் இடையே நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா - உக்கரைன் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது அது மட்டுமின்றி அமெரிக்க அதிபராக ட்ரம்ப் வெற்றி பெறுவார், அதிபராக ட்ரம்ப் பதவி ஏற்ற பிறகு இந்தியர்கள் உட்பட பல வெளிநாட்டவர்களுக்கும் பிரச்சனை ஏற்படும என்றும், இந்தியர்களின் வேலைக்கும் ஆபத்து ஏற்படும் என்று தெரிவித்திருந்தார். அதேபோல் சட்டவிரோதமாக குடியேறிய வெளிநாட்டவர்களை அதிபர் டிரம்ப் வெளியேற்றி வருகிறார். இந்தியர்களும் அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது தமிழக அரசியல், உலக அரசியல் மற்றும் பல்வேறு உலக நிகழ்வுகள் குறித்தும் அதிர வைக்கும் கணிப்புகளை தெரிவித்துள்ளார் நாடி ஜோதிடர் பாபு. இது தொடர்பாக youtube சேனல் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இரு ஒரு பெரும் கோர விபத்து நடைபெற உள்ளதாகவும் இரண்டு விமானங்கள் அல்லது வாகனங்கள் மோதிக்கொண்டு பலர் உயிரிழப்பார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேபோல் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய மழை பெய்யும். நமக்கு நம் லேசான மழை பெய்தாலும் வட மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் மழைப்பொழிவு இருக்கும். அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பேரழிவு ஏற்படும். ஜப்பானிலும் நீரால் பிரச்சனை ஏற்படும். கடல் சார்ந்த பல பிரச்சனைகள் உருவாகும். மூன்று கடல்கள் கூடும் தீபகற்பத்தில் நடுக்கடலில் உள்ள எரிமலை வெடிக்கும்.

இதனால் கடல் பொங்கும். நீர் வெப்பமடையும். மூன்று கோள்கள் ஒன்றாக சேர உள்ளதால் உலகின் மிகப்பெரிய அதிபரின் உடல்நிலையில் கோளாறுகள் ஏற்படும். உடல் நிலையில் பிரச்சனை ஏற்படும். ஒரு முக்கிய அமைச்சர் கைதாவார். இவருக்கு இப்படி ஒரு பிரச்சனையா என அவர் பெரிதும் பேசப்படுவார். பணம் மாற்றம் மற்றும் பணவர்த்தகம் தொடர்பாக ஒரு பெரிய கும்பல் சிக்க போகிறது. மிகப் பெரிய பணக்காரர் மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்குவார்.

அமெரிக்க வளாகம், வெள்ளை மாளிகை மீண்டும் ஒரு பிரச்சனையில் சிக்கும். பல அதிபர்கள் ஒன்று கூடி பேசும் கூட்டத்தில் ஒரு அதிபர் பேசும் பேச்சு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும். தமிழ்நாட்டில் ஒருவர் ஒரு அரசியல் குடும்பத்தில் சிக்கப்போகிறார். அது மட்டுமில்லாமல் இன்னொரு நடிகரும் அரசியல் வழி வரப் போகிறார். ஒரு பள்ளியில் தீ விபத்து ஏற்படப்போகிறது. மத்திய கிழக்கு நாடுகள் எதிர்பார்க்காத ஒரு பெரும் மழையை பெறப்போகிறது.

மூன்று இஸ்லாமிய நாடுகள் கூடி இருக்கும் இடத்தில் நடுவில் உள்ள கடலில் பெரிய நிலநடுக்கம் ஏற்பட உள்ளது. இந்த நிலநடுக்கம் இதுவரை பார்க்காத ஒரு நிலநடுக்கமாக இருக்கப்போகிறது. இந்தியாவின் தலைநகரியிலும் அமெரிக்கா ஜப்பான் போன்ற நாடுகளும் நிலநடுக்கத்தால் பிரச்சனைகளை சந்திக்கவுள்ளன. இதனால் மக்கள் பெரும் சிரமத்தை சந்திக்க உள்ளார்கள். இதனை தொடர்ந்து ஒரு ஒரு இஸ்லாமிய நாட்டிலும் நிலநடுக்கம் வருவதை நாம் பார்க்க முடியும்.

ஒரு ஆலயத்தில் மீண்டும் பிரச்சனை வரும். தங்கம் விலை உயர்ந்து, பின்னர் குறையும். அதன் பிறகு மீண்டும் தங்கம் விலை உயரும். வரும் மார்ச் மாதத்தில் தங்கம் நிலையில் கவனமாக இருக்க வேண்டும். விலைவாசிகள் எதிர்பாராத அளவுக்கு இருக்கும்.15ஆம் தேதிக்கு பிறகு அடுத்த ஆறாம் தேதி வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும். நிலவின் ஒளியும் அதிகமாக இருக்கும். சூரியனில் வெப்ப அலை வீசும். இதனால் உலகின் மிகப்பெரிய பனிப்பாறை உருகி தலைகீழாக கவிழும்.
 

இதனால் அமெரிக்கா பெரிதும் பாதிக்கப்படும். ஒரு நோய் தொற்று ஏற்படும். அந்த நோய் தொற்றால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் இருக்காது. இந்த நோயிலிருந்து தப்பிப்பது குறித்து பெரிய பெரிய விஞ்ஞானிகள் அறிவுறுத்தல்களை கொடுப்பார்கள். திருப்பதிக்கு செல்லும் மலைப்பாதையிலையோ அல்லது திருப்பதி மலைப்பகுதியிலோ சரிவு ஏற்படும். மேற்கத்திய நாடுகளில் உள்ள மலைகளிலும் சரிவு ஏற்படும். ஒரு கடலில் கொந்தளிப்பு ஏற்படும் இன்னொரு கடலில் நீரின் நிறம் மாறும்.

சூரியனின் வெப்பம் அதிகரிப்பதால் ஐரோப்பியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மக்களுக்கு தோல் வியாதிகள் ஏற்படும். ஓரிடத்தில் வெப்பமழை பெய்யும், மத்திய கிழக்கு நாடுகளில் புழுதி புயல் வீசும். ஒரு இஸ்லாமிய நாட்டில் வெடிக்க போகும் பிரச்சனை காரணமாக தங்கம் வெள்ளி விலை மீண்டும் உயர வாய்ப்புள்ளது. ஒரு மாநிலத்தில் சம்பளம் கொடுக்க முடியாமல் மாநில அரசு திணறும் நிலை ஏற்படும்.

சனி ராகு சேர்க்கையால் பூமிக்கு அடியில் உள்ள ஆதிகால பொருட்கள் வெளியே வரும். தமிழகத்தில் உள்ள எதிர்கட்சிகளுக்குள் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும். சண்டை போட்டுக்கொள்வார்கள். வடக்கில் எதிர்க்கட்சிகளுக்கும் மிகப்பெரிய குழப்பம் ஏற்படும். இதனால் ஆளுங்கட்சிக்கு சிக்கலும் சில பிரச்சனைகளும் வரும். பின்னர் ஆளுங்கட்சிக்கு சாதகமாக அமையும்.. இவ்வாறு நாடி ஜோதிடர் பாபு தமிழக அரசியல் உட்பட பல்வேறு சம்பவங்கள் குறித்து பேசியுள்ளார். 

Trending News

Latest News

You May Like