1. Home
  2. தமிழ்நாடு

இன்று ஆரம்பமாகும் சிபிஎஸ்இ பொதுத்தேர்வு: மொபைல் வைத்திருந்தால் 2 ஆண்டு தடை..!

1

சிபிஎஸ்இ 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வை நாடு முழுவதும் சுமார் 44 லட்சம் பேர் எழுத உள்ளனர். இந்த தேர்வுகள் காலை 10.30 மணிக்கு தொடங்கி மதியம் 12.30 மணி வரை நடைபெறவுள்ளது.   சிபிஎஸ்இ 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு  பிப்ரவரி 15ம் தேதி தொழிற்கல்வி பாடத்தோடு முதல் தேர்வு நடைபெற உள்ளது. இதனையடுத்து பிப்ரவரி 21 ஆம் தேதி இயற்பியல் தேர்வும், பிப்ரவரி  24ஆம் தேதி புவியியல் தேர்வும் நடைபெறவுள்ளது. பிப்ரவரி 27 ஆம் தேதி  வேதியியல் தேர்வுகள் நடக்க உள்ளதாக சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.


10ம் வகுப்பு தேர்வானது பிப்ரவரி 15ம் தேதி ஆங்கிலம், பிப்ரவரி 20ஆம் தேதியில்  அறிவியல் தேர்வுகள் நடைபெறவுள்ளது.  பிப்ரவரி மாதம் 27 ம் தேதி தமிழ் உள்ளிட்ட மொழிப்பாட தேர்வுகள் நெடைபெறுகிறது. மார்ச் 10ம் தேதி கணிதம தேர்வும் மார்ச் 13ம் தேதி ஹோம் சயின்ஸ் தேர்வுகள் நடைபெற இருப்பதாக அந்த அறிவிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது. 


2024- 25ஆம் ஆண்டு கல்வி ஆண்டின் 10, 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது.  நாடு முழுவதும் மற்றும் 26 வெளிநாடுகளில், 7,842 தேர்வு மையங்களில் இந்தத் தேர்வுகள் நடைபெற உள்ளன.

வரலாற்றிலேயே முதல் முறையாக தேர்வு மைய கண்காணிப்பாளர்கள், துணை மைய கண்காணிப்பாளர்கள், உதவி கண்காணிப்பாளர்கள், நகர ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு, சிபிஎஸ்இ நேரடி ஒளிபரப்பை ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நேரலை ஒளிபரப்பு நேற்று (பிப்ரவரி 14) பிற்பகல் 2.30 மணி முதல் CBSE-ன் யூடியூப்சேனலில் நேரலையில் ஒளிபரப்பானது, இது இரண்டு மணி நேரம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.


மாணவர்கள் என்ன செய்ய வேண்டும்?


* பொதுத் தேர்வை எழுத உள்ள மாணவர்கள் கட்டாயம் ஹால் டிக்கெட்டை எடுத்துச் செல்ல வேண்டும்.

* பள்ளி ஐ.டி. கார்டும் முக்கியம் ஆகும்.

* அதேபோல மின்னணு உபகரணங்களை எடுத்துச் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

*  தேர்வு எழுதும்போது மாணவர்கள் மொபைல் போன் (அ) எலக்ட்ரானிக் சாதனங்கள் வைத்திருப்பது கண்டறியப்பட்டால், தேர்வு எழுதுவதிலிருந்து 2 ஆண்டு தடை செய்யப்படுவார்கள் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இன்று 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆங்கிலப் பாடத்துக்கான தேர்வு நடைபெறுகிறது. காலை 10.30 முதல் 1.30 மணி வரை தேர்வு நடைபெறும்.

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தொழில்முனைவோருக்கான தாளுடன் முதல் தேர்வு தொடங்குகிறது. 12ஆம் வகுப்புப் பொதுத்தேர்வு ஏப்ரல் 4ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அதேபோல மார்ச் 18ஆம் தேதி வரை 10ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like