1. Home
  2. தமிழ்நாடு

பினராயி விஜயன் மகள், நிறுவனம் மீது அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு..!

Q

தனியார் தாதுப்பொருள் நிறுவனம் சட்டவிரோதமான வகையில் வீணா விஜயனின் நிறுவனத்துக்கு பணப்பரிமாற்றம் செய்துள்ளதாக அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கில் சட்டவிரோதப் பணப்பரிமாற்றமும் நடந்துள்ளதால், மேலும் சிலருக்கு எதிராக இந்த வழக்கின் கீழ் சம்மன் அனுப்பப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1685027990_pinarayi-vijayan.jpg
மத்திய கார்ப்பரேட் விவகாரத்துறையின் கீழ் வரும் விசாரணை அமைப்பான தீவிரமான மோசடி குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கும் அமைப்பு (எஸ்எப்ஐஓ) அளித்த புகாரையடுத்து, அமலாக்ககப்பிரிவு வழக்குப்பதிவு செய்துள்ளது.
கொச்சி நகரைச் சேர்ந்த தனியார் நிறுவனமான கொச்சின் மினரல்ஸ் அன்ட் ரூட்டைல் நிறுவனம் பினராயி விஜயனின் மகள் வீணா விஜயன் நடத்தும் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்துக்கு 2018 முதல் 2019ம் ஆண்டுவரை சட்டவிரோதமாக ரூ.1.72 கோடி பணம் செலுத்தியுள்ளது.
ஆனால், இந்த ஐடி நிறுவனம், கொச்சியைச் சேர்ந்த மினரல் நிறுவனத்துக்கு எந்த சேவையும் வழங்காத நிலையில் பணம் பெற்றுள்ளது என்று தீவிர மோசடி குற்றச்சாட்டு குறித்து விசாரிக்கும் அமைப்பு புகாரில் தெரிவித்துள்ளது.
VBK-Enforcement-Directorate.jfif
வீணா விஜயனின் நிறுவனத்துக்கு எதிராக எஸ்பிஐஓ நடத்தும் விசாரணையை ரத்து செய்ய தாக்கல் செய்த மனுவை கடந்த மாதம் கர்நாடக உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இந்த வழக்கில் தீவிரமான மோசடிகள் நடந்துள்ளன, பொது மக்களின் நலன் சார்ந்துள்ளதாக மத்திய அரசின் வழக்கறிஞர் வாதிட்டார். இதையடுத்து எஸ்எப்ஐஓ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

Trending News

Latest News

You May Like