1. Home
  2. தமிழ்நாடு

காங்., எம்.பி ராகேஷ் ரத்தோர் கைது..!

Q

உத்தரபிரதேச மாநிலம் சீதாபூரில் தனது வீட்டில் இருந்த காங்கிரஸ் எம்.பி., ராகேஷ் ரத்தோர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்து கொண்டிருந்தார்.
அப்போது அவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
திருமணம் செய்து கொள்வதாக கூறி ஒரு பெண்ணை நான்கு ஆண்டுகள் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக ரத்தோர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ஜனவரி 17 அன்று, அந்தப் பெண் புகார் அளித்ததை அடுத்து, உத்தரப் பிரதேச காவல்துறை ரத்தோர் மீது வழக்குப் பதிவு செய்தது. மூன்று நாட்களுக்குப் பிறகு, காங்கிரஸ் எம்.பி.,யின் வழக்கறிஞர்களான அரவிந்த் மஸ்தலன் மற்றும் தினேஷ் திரிபாதி ஆகியோர் சீதாப்பூரில் முன்ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தனர்.
ஜனவரி 23 அன்று சீதாப்பூரில் உள்ள எம்.பி.-எம்.எல்.ஏ நீதிமன்றம் ரத்தோரின் முன்ஜாமின் மனுவை நிராகரித்தது.
அலகாபாத் உயர்நீதிமன்றம் லக்னோ பெஞ்ச் இந்த வழக்கில் தனது முன்ஜாமின் மனுவை நிராகரித்த ஒரு நாளுக்குப் பிறகு ரத்தோர் கைது செய்யப்பட்டார்.

Trending News

Latest News

You May Like