1. Home
  2. தமிழ்நாடு

நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் கரும்புச் சாறு குடிக்கலாமா ?

1

கரும்புச்சாறு தினமும் குடிக்கும் போது உடல் சூடு தணிந்து உடல் குளிர்ச்சியடையும்.கரும்புச்சாறில் ஆன்டி ஆக்சிடண்ட், மக்னீசியம், இரும்புச்சத்து உள்ளன.இவை நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்..உடலை டீடாக்ஸ் செய்து கழிவுகளை வெளியேற்றும் பண்பு கொண்டது.எப்போதாலது நீரிழிவு பிரச்சினை உள்ளவர்கள் எப்போதாவது கரும்புச் சாறு குடிக்கலாம்.


கல்லீரலுக்கு கரும்புச்சாறு மிகவும் நல்லது. மஞ்சள் காமாலை உள்ளவர்கள் கூட குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.

கரும்புச்சாறில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. இது அனீமியா என்னும் ரத்த சோகை வராமல் தடுக்க முடியும்.

தினமும் சிறிதளவு கரும்புச்சாறு குடித்து வந்தால் ஜீரண ஆற்றல் மேம்படும். அஜீரணக் கோளாறு, வயிறு உப்பசம் ஆகியவை குறையும்.

இந்த பிரச்னை இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்கணும்:

நீரிழிவு நோய்
கரும்புச்சாற்றில் இயற்கையான சர்க்கரை அதிகமாக இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென அதிகரிக்கும். அதனால்தான் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கரும்புச்சாறு தீங்கு விளைவிக்கும் என்பார்கள்.

சிறுநீரக பிரச்சினைகள்
கரும்பு சாற்றில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது, இது சிறுநீரக பிரச்சனை உள்ளவர்களுக்கு ஆபத்தானது.

கல்லீரல் நோய்
கரும்புச்சாறு குடிப்பது கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்தும், இது கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீங்கு விளைவிக்கும்.

தலைவலி
தலைவலி பிரச்சனையுடன் போராடுபவர்கள், கரும்பு சாறு குடித்தால் மேலும் பிரச்சனையை தூண்டும். உங்களுக்கு  அடிக்கடி தலைவலி பிரச்சனை இருந்தால், கரும்பு சாறு குடிப்பதை தவிர்க்கவும். இதனால் தலைசுற்றல், தலைவலி போன்ற பல பிரச்சனைகள் வரலாம்.

குளிர் காய்ச்சல்
சளி, காய்ச்சல் வந்தால் கரும்புச்சாறு அருந்தக் கூடாது. இது தவிர கரும்புச்சாறு புண், இருமல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும்.

உலக அளவில் பிரேசில் தான் கரும்பை அதிகம் தயாரிக்கிறது. இருப்பினும், அவர்களைத் தாண்டி சுகர் நோயாளிகள் அதிகம் இருக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது. சுகர் பாதிப்பு உள்ளவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவைப் பார்த்துப் பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனிடையே பெரும்பாலும் சுகர் உள்ளவர்கள் கரும்பு ஜூஸை எடுத்துக் கொள்ளலாமா என்பதே கேள்வியாக இருக்கும். விளையாடும் போதே அல்லது வெயிலில் வெளியே செல்லும் போது கூல் டிரிஸ் குடிப்பது கெடுதல் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால் அதற்கு மாற்றாக கரும்பு ஜூஸை குடிக்கலாமா என்பது சுகர் நோயாளிகளின் கேள்வியாக இருக்கிறது கரும்பு ஜூஸ் என்பது நமது குடல் ஆரோக்கியமாக இருக்கப் பயன்படும்.. கரும்பு ஜூஸில் மெக்னீசியம், பொட்டாசியம், ஐயன், பி காம்ப்ளக்ஸ், விட்டமின் என பல சத்துகள் இருக்கிறது. விளையாடும் போது இது நமக்கு அதிக எனர்ஜியை தருவதாக இருக்கிறது.

வல்லுநர்கள் சொல்வது என்ன:

சுகர் நோயாளிகள் இதை எடுத்துக் கொள்ளலாம் என்ற போதிலும் மிதமாகவே சாப்பிட வேண்டும். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகையில் "கரும்பு ஜூஸில் இருக்கும் சர்க்கரை காரணமாக இது உடனடியாக நமது உடலுக்கு எனெர்ஜியை தருகிறது. அதேநேரம் இது கரும்பில் இருந்து வருவதால் இதை மிகவும் அளவாகவே சாப்பிட வேண்டும். அதேநேரம் முற்றிலுமாக இதைத் தவிர்க்க வேண்டும் என்று இல்லை. கரும்பிலிருந்து கிடைக்கும் சர்க்கரை நமது சிறுகுடலுக்குச் செல்லாமல் கல்லீரலில் தான் ஜீரணமாகும். எனவே கூல் டிரிங்கஸை குடிப்பதற்குப் பதிலாக இதை எடுத்துக் கொள்ளலாம். அதேநேரம் டைப் 2 சுகர் பாதிப்பு கொண்டவர்கள் இதை மேலும் கவனத்துடன் அளவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களால் கண்டிரோல் செய்ய முடியாது என நினைத்தால் கரும்பு ஜூஸுக்கு பதிலாக நேரடியாக சில துண்டு கரும்பை மென்று துப்பிவிடலாம். அதேநேரம் சுகர் இருப்போர் இதைத் தினசரி குடிப்பதும் ஆபத்தானது" என்றார்.

அதேநேரம் சுகர் பாதிப்பு இல்லை என்றால் இதை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம். ஒரு கிளாஸ் ஜூஸில் நமக்கு ஒரு நாளைக்குத் தேவையான ஐயன் சத்து இருக்கிறது. மேலும், கரும்பில் இயற்கையாகக் கிடைக்கும் சர்க்கரை அதிகமாக இருக்கிறது. குறிப்பாக சுக்ரோஸ் அதிகமாக இருக்கிறது. கரும்பில் ஃபைபரும் இருக்கிறது. இது நமது உடலுக்கு ரொம்பவே நல்லது.மேலே கூறப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான டிப்ஸ் மட்டுமே. இதை மருத்துவ அறிவுரையாக எடுத்துக் கொள்ளக் கூடாது. உடலில் எதாவது பிரச்சினை என்றால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.

Trending News

Latest News

You May Like