ஒரு பள்ளி ஆசிரியர் இப்படி செய்யலாமா..?அது பள்ளிக்கூடத்தில்...

ராஜஸ்தான் மாநிலம் சித்தோர்கரில் உள்ள சலேரா கிராமத்தில் செயல்படும் அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர், பலமுறை அந்தப் பெண் ஆசிரியை முத்தமிடுவதும், கட்டிப்பிடிப்பதும், தகாத செயல்களில் ஈடுபடுவதும் சிசிடிவியில் சிக்கியது.
மற்றுமொரு காணொளியில், அதிபர் பாடசாலையில் தனது மேசையில் அமர்ந்து புகையிலையை போடுவதை காணலாம். இந்த வீடியோக்கள் பள்ளி வளாகத்திற்குள் தலைமை ஆசிரியரின் தகாத நடத்தைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
இந்தச் சம்பவம்குறித்து பதிலளித்த மாவட்ட கல்வி அதிகாரி ராஜேந்திர சர்மா, “முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டுள்ளது. தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியை இருவரும் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்த குழு அமைக்கப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்