1. Home
  2. தமிழ்நாடு

#BREAKING : பாதுகாப்பாக தரையிறங்கிய விமானம்! “திக்... திக்... நிமிடங்கள்”

Q

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர் சார்ஜா மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருச்சி விமான நிலையத்திலிருந்து மாலை 5:40 மணிக்கு 141 பயணிகளுடன் ஷார்ஜா நோக்கி புறப்பட்ட விமானம் ஹைட்ராலிக் பிரச்சனையால் மீண்டும் திருச்சி விமான நிலையம் வந்து கொண்டிருக்கிறது.

 

விமானத்தை பாதுகாப்புடன் இறக்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஏற்பாடுகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர், விமான தொழில்நுட்ப குழுவினர் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

தற்போது விமான நிலையத்தில் பயணிகள் வந்தவுடன் அவர்களுக்கு மருத்துவர் உதவி வழங்குவதற்கான 20க்கு மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டது

 

.இந்நிலையில் சுமார் 2 மணி நேரமாக 141 பயணிகளுடன் வட்டமடித்துக் கொண்டிருந்த விமானம் பாதுகாப்பாகத் தரையிறங்கியுள்ளது. விமானம் ஓடுபாதையில் தரையிறங்கிய போது பயங்கர புகை வந்தது குறிப்பிடத்தக்கது.


 

Trending News

Latest News

You May Like