#BREAKING : பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள் பாட்டி காலமானார்..!
கோவை மாவட்டம் தேக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாப்பம்மாள். 109 வயதான இவர் ரசாயன உரங்கள் இன்றி இயற்கை முறையிலேயே விவசாயம் செய்து வருகிறார்.
அவரது இந்த ஈடுபாட்டையும் சாதனையையும் பாராட்டி அவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
கடந்த 2021 ஆம் ஆண்டு கோவை வந்த பிரதமர் மோடி, பாப்பம்மாள் காலில் விழுந்து வணங்கினார்.
இந்நிலையில், 108 வயது நிரம்பிய பாப்பம்மாள் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக இன்று (27.09.2024) உயிரிழந்தார்.