1. Home
  2. தமிழ்நாடு

அடுத்தடுத்து ஓடிடியில் வெளியாகும் பிளாக்பஸ்டர் படங்கள்..!

1

மக்களின் நெடுநாள் எதிர்பார்ப்பாக இருக்கும் 2 பிளாக்பஸ்டர் படங்கள் அடுத்த வாரம் அதாவது வரும் ஆகஸ்ட் 22 மற்றும் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

கல்கி 2898 ஏடி திரைப்படம் பிரம்மாண்டமான பொருள் செலவில் எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்த திரைப்படம் கடந்த ஜூன் 27ஆம் தேதி வெளியானது. இந்த திரைப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியிருக்கிறார். மகாபாரத யுத்தமான குருஷேத்திரம் நடந்து 6000 வருடங்களுக்குப் பிறகு நடக்கும் கதையாக இந்த திரைப்படம் இருக்கிறது.

கல்கி, சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். இந்தத் திரைப்படம் வெளியான வெளியான முதல் நாளிலேயே 180 கோடி வசூலுடன் ஆட்டத்தை தொடங்கி பரபரப்பு ஏற்படுத்தியது. அதோடு கல்கி திரைப்படம் இதுவரைக்கும் உலகெங்கும் 1100 கோடி ரூபாய் வசூலித்ததாக கூறப்படுகிறது

கல்வி 2898 ஏடி திரைப்படத்தில் இந்தி மொழி ஓடிடி உரிமையை netflix நிறுவனம் வாங்கியுள்ளது. அதுபோல தென்னிந்திய மொழி உரிமையை அமேசான் பிரைம் ஓடிடி தளம் வாங்கி இருக்கிறது. இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி அமேசான் பிரைமில் "கல்கி 2898 ஏடி" திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவித்துள்ளனர். அமேசான் பிரைமில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாக உள்ளது.

அதே போல் ராயன் படம் ஆகஸ்ட் 23ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது  

நடிகர் தனுஷுக்கு 50-வது திரைப்படமாக வெளிவந்த படம் ராயன்.இந்த திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படத்திற்கு பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. பிரம்மாண்டமாக கடந்த ஜூலை 26 ஆம் தேதி தியேட்டரில் வெளியாகி இருந்த நிலையில் இந்த திரைப்படம் 150 கோடியை தாண்டி வசூல் பெற்றிருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் ராயன் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் பற்றிய செய்தியும் வெளியாகி இருக்கிறது.ராயன் படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் வாங்கி இருக்கிறதுவரும் 23-ம் தேதி அமேசான் பிரைம் வீடியோ ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like