1. Home
  2. தமிழ்நாடு

பாஜகவிற்கு தமிழ்நாட்டில் 5 உறுதி.. சிங்கிளாக 350 சீட் கிடைக்கும்.. அடித்துச் சொல்லும் சுர்ஜித் பல்லா..!

1

தமிழ்நாட்டில் வாக்குப் பதிவு முடிந்து விட்டது. இப்போது அடுத்தடுத்து முக்கிய மாநிலங்களில் நடைபெறவுள்ளது. குறிப்பாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஏதாவது மாஜிக் நடந்து விடாதா என்ற எதிர்பார்ப்பில் பாஜக உள்ளது. வட மாநிலங்களிலும் அது படபடப்புடன் காத்திருக்கிறது.

இந்த நிலையில், சுர்ஜித் பல்லா என்பவர் என்டிடிவிக்கு அளித்த பேட்டி ஒன்றில் தமிழ்நாட்டில் பாஜகவுக்கு 5 சீட் கிடைக்கும் என்று கூறி அதிர வைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:

2919 தேர்தலை விட இந்த முறை சிறப்பாக பாஜக செயல்படும். கிடைத்துள்ள புள்ளிவிவரத் தகவல்களின்படி பாஜகவுக்கு மட்டும் தனியாக 330 முதல் 350 தொகுதிகள் வரை கிடைக்கக் கூடும்.  கூட்டணிக் கட்சிகளுக்கும் சேர்த்துப் பார்த்தால் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கும். 2019 தேர்தலிள் கிடைத்ததை விட 5 முதல் 7 சததவீதம் கூடுதல் சீட்டுகள் பாஜகவுக்கும், கூட்டணிக்கும் கிடைக்கும். இது ஒரு அலை. ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு அலை வீசும். இப்போதும் அது இருக்கிறது.  அதேசமயம், கடந்த காலங்களைப் போல பெரிய அலையாக இது இல்லை. 

காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை கடந்த 2014 தேர்தலை விட 2 சதவீத அளவுக்கு குறைந்த சீட்டுகள் கிடைக்கும். அதாவது  44 இடங்கள் வரை காங்கிரஸுக்குக் கிடைக்கலாம். எதிர்க்கட்சிகளைப் பொறுத்தவரை தலைவர் என்று யாரும் இல்லாததே அவர்களுக்குப் பெரிய பின்னடைவு.   பொருளாதாரம், நல்ல தலைமை.. இது இரண்டுமே முக்கியம். இது பாஜகவுக்கு சாதகமாக உள்ளது. பிரதமர் மோடிக்கு நிகரான ஒரு தலைவரைத் தேர்ந்தெடுத்து அவரை பிரதமர் வேட்பாளராக அறிவித்து எதிர்க்கட்சிகள் களம் இறங்கியிருந்தால் போட்டி பலமாக இருந்திருக்கும்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை பாஜகவுக்கு 5 தொகுதிகளில் வெற்றி கிடைக்கலாம். அதேசமயம், அவை வெல்லப் போகும் இதுவரை பலவீனமாக இருந்து வந்த இடம் என்பது முக்கியமானது. அதேபோல கேரளாவில் ஒன்று அல்லது 2 இடங்கள் பாஜகவுக்குக் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார் அவர்.

பாஜக பலவீனமாக இருந்த தொகுதிகளில் அது 5 தொகுதிகளை வெல்லப் போகிறது என்று சுர்ஜித் பல்லா கூறியிருப்பது ஆச்சரியத்தைத் தருவதாக உள்ளது. அதேசமயம், எந்தெந்த தொகுதிகளில் வாய்ப்பிருக்கிறது என்பது குறித்து அவர் எதுவும் சொல்லவில்லை.

Trending News

Latest News

You May Like