1. Home
  2. தமிழ்நாடு

#BIG NEWS : ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவால்னி திடீர் உயிரிழப்பு..!

1

புதினை கடுமையாக விமர்சித்து வந்த ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவால்னி உயிரிழந்துள்ளார். 

அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.கடந்த 2021-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நவால்னிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிறையில் உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அலெக்ஸ் நவால்னி உயிரிழப்புக்கான காரணம் குறித்த தகவல் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை.

இது தொடர்பாக ரஷ்யாவின் பெடரல் சிறைச்சாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "அலெக்ஸி நவல்னி சிறையில் வழக்கம் போல வாக்கிங் சென்று வந்தார். அப்போது திடீரென அவர் சுயநினைவை இழந்தார். இதையடுத்து சிறையில் உள்ள மருத்துவ ஊழியர்கள் உடனடியாக அவரை பரிசோதனை செய்தனர். மேலும், ஆம்புலன்ஸ் கூட சம்பவ இடத்திற்கு விரைந்தது.அவரை காப்பாற்றும் முயற்சிகள் எடுக்கப்பட்ட போதிலும் அதற்குப் பலன் இல்லை. அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்ததை உறுதி செய்தனர். மரணத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like