25 லட்சம் நிதியுதவி அளித்த நடிகர் தனுஷ்..!
வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ராணுவமும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல் கட்சித்தலைவர்கள், திரை பிரபலங்கள் ஆறுதல்களையும் இரங்கல்களையும் தெரிவித்தனர்.
இந்த நிலையில், வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் கேரள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.25 லட்சம் நன்கொடையாக நடிகர் தனுஷ் வழங்கியுள்ளார்.