ஈரோடு மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை..!

அதன்படி, வரும் பிப்ரவரி 3ம் தேதி முதல் 5ம் தேதி வரையும் மற்றும் 8ம் தேதி ஆகிய 4 நாட்களுக்கு ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து எப்எல்2, எப்எல்3, எப்எல்ஏ மற்றும் எப்எல்7 ஆகிய உரிமத்தலங்கள் மற்றும் தமிழ்நாடு மாநில வாணிபக்கழகம் (டாஸ்மாக்) நடத்தும் அனைத்து மதுபானக் கடைகள் அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் ஆகியவை மூடப்பட்டிருக்கும்.
அன்றைய தினங்களில் மதுபான விற்பனைகள் ஏதும் நடைபெறாது. மேலும், அன்றைய தினம் மது விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.